மும்பை: கடந்த 10 நாட்களாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதியாக நேற்று முன்தினம் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகளை கரைத்த போது, வார்தா மாவட்டம் சவாங்கி கிராமத்தில் நீரில் மூழ்கி 3 பேரும் தேவ்லி நகரில் ஒருவரும் உயிரிழந்தனர். அகமது நகரில் 2 பேரும் ஜல்கான் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்தனர். இதுபோல மாநிலத்தில் விநாயகர் ஊர்வலத்தின் போது விபத்து மற்றும் நீரில் மூழ்கி 19 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.