நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியோ பேரணி மேற்கொள்வார் என ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசு கொண்டு வந்த மது கலால் வரி கொள்கை, ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக பெரும் சப்தத்துடன் வெடித்தது. தற்போது மணீஷ் சிசோடியா கண்காணிப்பில் உள்ளார் பாஜகவினர் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில், “சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பேரணி செல்லவுள்ளார் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இது குறித்து கெஜ்ரிவால் விடுத்துள்ள ட்வீட்டில், “குஜராத் மாற்றத்தை விரும்புகிறது. விரைவில் மணிஷ் சிசோடியா குஜராத்தில் பேரணி செல்வார்.” எனத் தெரவித்துள்ளார்.
எனினும் மணிஷ் சிசோடியாவின் நிகழ்ச்சி நிரல் குறித்த எதையும் அவர் கூறவில்லை. இதற்கிடையில் கெஜ்ரிவாலின் ட்வீட்டை வரவேற்று பதிலளித்த குஜராம் மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கோபால் இத்தாலியா, “மணிஷ் சிசோடியாவை வரவேற்று, கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்து மக்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும் ஆம் ஆத்மி அரசாங்கம் கல்வி, சுகாதாரம், மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும் என்றார். இதற்கு எதிர்வினையாற்றியுள்ள பாஜக தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் அமித் மாளவியா, மணீஷ் சிசோடியா யாத்திரைக்கு கிளம்பிவிட்டால் உங்களுக்கு மதுபானம் தருவது யார்? எனக் கேள்வியெழுப்பினார்.
இதேபோல் குஜராத் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரிஜேஸ் ராய், “சிபிஐ கூட சிசோடியாவை இங்கிருந்து அழைத்துச் செல்லலாம்” என்றார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்குகிறது.
இந்தக் கட்சி பாஜகவின் கல்வி கொள்கையை விமர்சித்து வருகிறது. மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம், இளைஞர்களுக்க வேலை வாய்ப்பு, மாதாந்திர உதவித் தொகை ரூ.3 ஆயிரம் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்துவருகிறது.
மேலும் 18 வயதை கடந்த வேலையில்லாத பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆம் ஆத்மி அரசாங்கம் 2021இல் டெல்லியில் கலால் வரி கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்ன.
இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா டெல்லி இல்லத்தில் ஆகஸ்ட் மாதம் சோதனை நடைபெற்றது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“