சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட 85 பேரை ,இலங்கை கடற்படையினர் மட்டக்களப்பு கடற்பரப்பில் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் ,கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த குழு என சந்தேகிக்கப்படும் 85 நபர்களை ஏற்றிச் சென்ற ,உள்ளூர் மீன்பிடி இழுவை படகொண்ரை ,இன்று முற்பகல் மட்டக்களப்பு கடல் பகுதியில் முற்றுகையிடப்பட்டது. முற்றுகையிடப்பட்டது. இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நபர்களை ஏற்றிச் சென்ற மீனவ படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில்; படகு நடத்துபவர்கள் உட்பட 60 ஆண்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட 14 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 11 நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்