தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய ஆண் நண்பருக்கு நபர் கொடுத்த தண்டனை
ஆண் நண்பரின் தாக்குதலால் கோபத்தில் அவரது பிறப்புறுப்பை வெட்டிய நபர்
இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தில் தன்னை பிளாக்மெயில் செய்த ஆண் நண்பரின் பிறப்புறுப்பை இளைஞர் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலம் பரேலில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து பொலிசாருக்கு அழைப்பு வந்துள்ளது.
ஆண்கள் இருவர் சண்டையிட்டுக் கொண்டதில் ஒருவரின் பிறப்புறுப்பு வெட்டப்பட்டதாக பொலிசாருக்கு தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்த பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில், இருவரும் தனிமையில் இருந்ததை ஆண் நண்பர் அந்த இளைஞருக்கு தெரியாமல் வீடியோவாக எடுத்துள்ளார்.
அதனை வைத்து அடிக்கடி அவரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் இருவரும் விடுதியில் சந்தித்தபோது, அந்தரங்க வீடியோவை அழித்துவிடுமாறு இளைஞர் கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு நண்பர் மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது குறித்த நபரை அந்த இளைஞர் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் வலி தாங்காமல் தவித்த இளைஞர் கூர்மையான பொருளால் நண்பரின் பிறப்புறுப்பை வெட்டியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து இருவரும் இதுவரை புகார் அளிக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும் விரைவில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.