தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் என்று பலரால் கருதப்படும் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சி பலிக்கவில்லை. இதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. பொன்னியின் செல்வனில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி,பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படமானது செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படம் வெளியாக இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகளையும், புரோமோஷன் பணிகளையும் பொன்னியின் செல்வன் குழு தொடங்கியுள்ளது.
படத்தின் டீசரும், பொன்னி நதி பார்க்கணுமே என்ற பாடலும் முதலில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து அந்தப் படத்தின் ட்ரெய்லரும், மற்ற பாடல்களும் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த விழாவில் ரஜினி, கமல் ஹாசன், மணிரத்னம், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், ரசிகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Candids from the Grand Music & Trailer Launch Event of #PS1 (12/12)#PonniyinSelvan #PS1AudioLaunch #PS1Trailer#ManiRatnam @MadrasTalkies_ @LycaProductions @arrahman @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/05mc4ckkXU
— Lyca Productions (@LycaProductions) September 8, 2022
பொன்னியின் செல்வனின் ட்ரெயல்ரை பார்த்த ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்துவருகின்றனர். மேலும் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் படத்தின் வியாபார பணிகள் சூடுபிடித்துள்ளன.
அந்தவகையில் பொன்னியின் செல்வன் படத்தின் வெளிநாட்டு வெளியீடு வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. அதன்படி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் சரிகம சினிமாஸ் நிறுவனமும், கனடாவில் KW டாக்கீஸ் நிறுவனமும், Night ED Films நிறுவனமும், ஐரோப்பாவில் போலின் நிறுவனமும் வெளியிடுகின்றனர்.
அதேபோல், மத்திய கிழக்கு நாடுகளில் PHF நிறுவனமும்ம் மலேசியாவில் லோட்டஸ் மற்றும் 5 ஸ்டார் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன. சிங்கப்பூரில் ஹோம் ஸ்க்ரீன் நிறுவனத்தினர் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிட உள்ளனர்.