திருமலை: ஆந்திர முதல்வரின் சொந்த மாவட்டத்தில் சாலை வசதி கேட்டு வார்டு கவுன்சிலர் ஒருவர் சேறும், சகதியுமான சாலையில் அங்க பிரதட்சணம் செய்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சொந்த மாவட்டமான கடப்பா மாவட்டம் சொமிரெட்டிப்பள்ளி பஞ்சாயத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சேதம் அடைந்துள்ளது. தற்போது தொடர்ந்து பெய்த மழையால் மண் சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனை சரி செய்து சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று வார்டு கவுன்சிலர் ராஜேஷ் சேறும், சகதியுமான சாலையில் அங்க பிரதட்சணம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
