பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சண்முகம் காலமானார்

சென்னை:
ம்மி என்கிற சண்முகம் காலமானார்.

நியூஸ் 7 தமிழ் சேனலின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றியவரும் ஆரம்பக் காலத்தில் சன் டிவியில் பணியாற்றியவருமான மூத்த ஊடகவியலாளர் ஷம்மி என்கிற சண்முகம் உடல்நலக் குறைவால் காலமானார்.

சன் டிவியிலிருந்து வெளியேறிய பிறகு நியூஸ் 7 தமிழ் சேனலில் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராகப் பணிபுரிந்து வந்தார். அங்கு ‘பேசும் தலைமை’, ‘பீனிக்ஸ் மனிதர்கள்’ ஆகிய வெற்றிகரமான நிகழ்ச்சிகளைக் கொண்டு வந்தவர்.

ஊடகப் பணி தாண்டி விளம்பரப் படங்கள், மற்றும் சினிமா இயக்கம் எனப் பல முயற்சிகளில் இருந்தவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் போகச் சிகிச்சை எடுத்து வந்தார். ஆயினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை காலமானார். இவரது மறைவுக்குத் தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார், ஊடகவியலாளர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.