மத்திய அரசு கொடுக்கும் அடுத்ததினால் தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். கடந்த ஜூலை மாதம் முதல் இந்த மின் கட்டண உயர்வு குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று 30 நாட்கள் அவகாசம் வழங்கி தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
அதன் பின் நேற்று தமிழ்நாட்டில் ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணத்தை உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். மேலும் இது நேற்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டமும், குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியமும் தொடரும். 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2 மாதத்துக்கு ரூ.55 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
மொத்தம் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு ரூ.595 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.” என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மின்சார கட்டண உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும், மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்து வருகிறது.
என்னங்க சார் இது அக்கிரமமா இருக்கு..😒 #Dmkfails #Mkstalin #dmk4tn pic.twitter.com/9bnUkulw9m
— Neelamegam S (@NeelamegamS3) September 11, 2022
இது குறித்து எதிர்க்கட்சி மற்றும் தமிழக கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இத்தகைய சூழலில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடந்த ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில், “மின்சாரம் தான் ஷாக் அடிக்கும். ஆனால் மின் கட்டண உயர்வை பற்றி செய்தி கேட்டாலே ஷாக் அடிக்கிறது. நாடு இருக்கும் நிலையில், இது மக்களின் மிகப்பெரிய சுமை.” என்று பேசியது தற்போது வைரலாகி விமர்சனங்களை பெற்று வருகிறது.