போபால்: கோயில் இருந்து பாதாம் பருப்பை திருடியதாக கூறி, சிறுவனை ஒருவரை அர்ச்சகர் மரத்தில் கட்டிவைத்து அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் மரத்தில் கட்டப்பட்டிருந்த சிறுவன் அழுதுகொண்ட தன்னை விடுவிக்கும்படி கெஞ்சும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த வீடியோ குறித்து விசாரிக்கையில், அந்த வீடியோவில் இருப்பது மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.
சமூக வலைதள வீடியோ
இதனைத்தொடர்ந்து எதற்கான சிறுவன் மரத்தில் கட்டி வைக்கபட்டுள்ளான், யாரால் கட்டி வைக்கப்பட்டான் என்ற விவரங்கள் தெரிய வந்தன. அதில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாஹர் பகுதியில் ஜெயின் கோயில் உள்ளது. அந்த ஜெயின் கோயிலும் அர்ச்சகராக ராகேஷ் ஜெயின் என்பவர் பணியாற்றி வருகிறார்.
சிறுவனை அடித்த அர்ச்சகர்
இவரின் அர்ச்சனை தட்டில் இருந்த பாதாம் பருப்பை சிறுவன் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அர்ச்சகர் ராகேஷ் ஜெயின், சிறுவனை மரத்தில் கட்டிவைத்து கொடூரமாக அடித்துள்ளார். சிறுவன் கதறி அழுததுடன் தன்னை விட்டுவிடும்படி கதறியுள்ளார். ஆனாலும் அர்ச்சர் அதைக் கேட்கவில்லை. இதனிடையே சிறுவனை விட்டுவிடும்படி, அர்ச்சகரிடம் ஒருவர் அறிவுறுத்திய போது, உன் வேலையை மட்டும் பார் என்று ஆவேசமாக கூறுகிறார்.
சிறுவனின் தந்தை புகார்
இதனிடையே சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வேகமாக பரவிய நிலையில், அந்த சிறுவனின் தந்தை மோதி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், கோயில் அருகே நின்றுகொண்டிருந்த போது பாதாம் பருப்பு திருடியதாக என் மீது குற்றம்சாட்டி, மரத்தில் கட்டிவைத்து அடித்ததாகவும், தன்னை மரத்தில் கட்டுவதற்கு இன்னொரு நபர் உதவி புரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை கைது செய்யப்படவில்லை
இதனைத்தொடர்ந்து மோதி நகர் காவல்துறையினர் அர்ச்சகர் ராகேஷ் ஜெயின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அர்ச்சகர் ராகேஷ் ஜெயின் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அர்ச்சகரே சிறுவனை கட்டிவைத்து அடித்த செயல் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.