காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், தகவல் தொழில்நுட்பத்துறை தொடக்கவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி துணை தலைவர் மணி தலைமை தாங்கினார். முதன்மை செயல் அலுவலர் விஜயராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சரவணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தனியார் மென்பொருள் நிறுவனத்தை சேர்ந்த விஜயன் ஏகாம்பரம் கலந்துகொண்டு, தகவல் தொழில்நுட்பங்களை செயல்படுத்துதல், அதிலிருந்து பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைத்தல் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார்.
மேலும் பொறியியல் திட்டம் தொடர்பான தகவல்கள், இண்டஸ்ட்ரி 4.0 செயல்படுத்துதல் முறை பற்றி விவரித்தார்.விழாவில், கல்லூரி துணை முதல்வர் ஜானகிராமன், துறை தலைவர் தேவராஜன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இறுதியாக தகவல் தொழில்நுட்பத்துறை இறுதி ஆண்டு மாணவி மனொஜா நன்றி கூறினார்.