நீலகிரியில் இரண்டு சிறுத்தைகள் மற்றும் இரண்டு கருச்சிறுத்தைகள் ஒரே நேரத்தில் குடியிருப்பு பகுதியில் உலா வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் நீர் தேடி அடிக்கடி வனவிலங்குளான கரடி,காட்டு மாடு,சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது.
கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பகுதியில் இருந்து கோட்டாஹால் செல்லும் சாலையில் உள்ள குடியிருப்புகள் அதிகம் நிறைந்துள்ள பகுதியில் நள்ளிரவில் ஒரே நேரத்தில் குடியிருப்பு முன் உள்ள சாலையில் நீண்ட நேரமாக இரண்டு சிறுத்தைகள் மற்றும் இரண்டு கருஞ்சிறுத்தைகள் உலா வந்துள்ளன.
இந்தக் காட்சியானது அங்குள்ள குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி குடியிருப்பு வாசிகளை பெரும் அச்சமடைய செய்துள்ளது.
எனவே குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தைகள் மற்றும் கருச்சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அரவேனு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டு சிறுத்தைகள் மற்றும் இரண்டு கருஞ்சிறுத்தைகள் ஒரே நேரத்தில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த சம்பவம் அரவேனு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“