ரிஷி சுனக்-ஐ அசிங்கப்படுத்திய பிரிட்டன் நிறுவனம்.. இப்படியா விளம்பரம் செய்வீங்க..!

பிரிட்டன் தற்போது ராணி எலிசபெத் மறைவின் சோகத்தில் இருந்தாலும் அந்நாட்டின் பிரதமராக Liz Truss தேர்வு செய்யப்பட்டு உள்ளதும், இதேவேளையில் முன்னாள் நிதியமைச்சரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக்-ன் தோல்வி பெரும் பாதிப்பை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இதைக் கிண்டல் செய்யும் வகையிலும் அதேபோல் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் CV Library என்னும் வேலைவாய்ப்பு தேடல் நிறுவனம் ரிஷி சுனக்-ஐ பகிரங்கமாகக் கிண்டல் செய்யும் வகையில் விளம்பரம் செய்துள்ளது. இது இந்த விளம்பரம் இந்தியர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் பிரிட்டன் நாட்டவர்கள் மத்தியிலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு உள்ளது.

அப்படி என்ன விளம்பரம் செய்யப்பட்டது தெரியுமா..?

காஃபி ஷாப்பில் ஆஃபீஸ்.. பெங்களூர் இளைஞர்கள் மழையால் திண்டாட்டம்..!

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டன் நாட்டின் பல்வேறு குற்றச்சாட்டுகள் மத்தியில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகிய நிலையில், இப்பதவிக்குப் போட்டிப்படோ பலர் முன்வந்தனர்.

பிரதமர் Liz Truss

பிரதமர் Liz Truss

இதில் கடைசிக்கட்டத்திற்கு முன்னேறியதில் ரிஷி சுனக் மற்றும் Liz Truss ஆகியோர் தான். கடைசி வாக்குப்பதிவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ரிஷி சுனக் தோல்வியைச் சந்தித்த காரணத்தால் Liz Truss பிரிட்டன் நாட்டின் பிரதமர் ஆனார்.

ரிஷி சுனக்
 

ரிஷி சுனக்

இந்த நிலையில் CV Library என்னும் நிறுவனம் பிரிட்டன் நாட்டின் முன்னணி வேலைவாய்ப்பு நிறுவனம் முக்கியப் பகுதிகளில் “Didn’t get the job? We’ve got jobs for everyone என்ற வாசகத்துடன் ரிஷி சுனக் புகைப்படத்துடன் விளம்பரம் செய்தது. அதாவது உங்களுக்கு வேலை கிடைக்கவில்லையா..? அனைவருக்குமான வேலைவாய்ப்பு எங்களிடம் உள்ளது.? என்று பிரதமர் போட்டியில் தோல்வியுற்றதைக் கிண்டல் செய்யும் விதமாக விளம்பரம் செய்துள்ளது.

டிரெண்டிங்

டிரெண்டிங்

 

இந்தப் புகைப்படம் தான் தற்போது பிரிட்டன் நாட்டைத் தாண்டி உலகளவில் டிரெண்டாகி வருவது மட்டும் அல்லாமல் அதிகப்படியான விமர்சனங்களையும், அதேவேளையில் வெகுமதிகளையும் சம்பாதித்து வருகிறது. இதில் ஒருவர் இதுபோன்று விளம்பரம் செய்ய ரிஷி சுனக் அனுமதி பெறப்பட்டதாக என்று கேள்வி கேட்டு உள்ளார்.

CV Library நிறுவனம்

CV Library நிறுவனம்

CV Library நிறுவனம் இதுபோன்று சர்ச்சையான விளம்பரங்களைச் செய்வது இது முதல் முறையல்ல, இதற்கு முன்பு ஜூலை மாதம் போரிஸ் ஜான்சான் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் போது இதே CV Library நிறுவனம் எப்போது புதிதாக ஒரு விஷயத்தைத் துவங்குவதற்கு ஒரு உற்சாகம் இருக்கும். இப்புதிய துவக்கத்திற்காக நீங்கள் தேடலைத் தொடங்கும் போதெல்லாம் உங்களுக்காக அற்புதமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

ரிஷி சுனக் - நாராயண மூர்த்தி

ரிஷி சுனக் – நாராயண மூர்த்தி

2015 முதல் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இருக்கும் ரிஷி சுனக் குறைந்த காலகட்டத்திலேயே போரீஸ் ஜான்சனிடம் நற்பெயரைப் பெற்ற காரணத்தால் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும் ரிஷி சுனக் இன்போசிஸ் நிறுவனர் நாரணயமூர்த்தியின் ஓரே மகளான அக்ஷதா மூர்த்தியின் கணவர் ஆவார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

UK company trolled Rishi Sunak With ‘Didn’t Get the Job’ Billboard After Liz Truss Win in PM race

UK company trolled Rishi Sunak With ‘Didn’t Get the Job’ Billboard After Liz Truss Win in PM race ரிஷி சுனக்-ஐ அசிங்கப்படுத்திய பிரிட்டன் நிறுவனம்.. இப்படியா விளம்பரம் செய்வீங்க..!

Story first published: Sunday, September 11, 2022, 15:50 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.