உலகம் முழுவதும் முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால விசா அல்லது குடியுரிமை வழங்கும் திட்டங்கள் உள்ளது, அமெரிக்கா முதல் சிங்கப்பூர் வரையில் பெரும்பாலான நாடுகளில் உள்ளது.
அப்படி ஆஸ்திரேலியாவில் 5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ($3.4 மில்லியன்) முதலீடு செய்பவர்களுக்கான விசா வழங்கும் திட்டத்தை மறு ஆய்வு செய்ய உள்ளது அந்நாட்டு அரசு.
ஏன் இந்தத் திடீர் முடிவு, எதற்காக இத்தகைய முக்கியமான திட்டத்தை ஆஸ்திரேலியா அரசு மறு ஆய்வு செய்கிறது…?
40 ஆண்டுகள் நிறைவு செய்த மாருதி சுசூகி கூட்டணி..!
ஆஸ்திரேலியா – சீனா
கொரோனா தொற்றுத் துவங்குவதற்கு முன்பே ஆஸ்திரேலியா – சீனா மாத்திலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் சீனா மக்களை ஆஸ்திரேலியாவுகள் நுழைவதைத் தடுக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் 5 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர்கள் ($3.4 மில்லியன்) முதலீடு செய்பவர்களுக்கு விசா வழங்கும் திட்டம் மூலம் சீனர்களின் பணக்காரர்களுக்கு ஆஸ்திரேலியா நாட்டில் வர்த்தகம் மற்றும் முதலீடு செய்ய விரைவான பாதையை வழங்குவதாக விமர்சிக்கப்படுகிறது.
மறு ஆய்வு
இதனால் இந்த முதலீட்டு வாயிலான திட்டத்தை மறு ஆய்வு செய்து அரசு விரும்பும் அல்லது அரசுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கு வேண்டியவர்களை மட்டும் தேர்வு செய்யும் விதமாக மறுசீரமைப்புச் செய்யத் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. இதேபோல் சீனர்கள் இதில் அதிகளவில் பலன் அடைகிறார்கள் என்பதையும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மறுக்கவில்லை.
முதலீட்டாளர் விசா
இந்த முதலீட்டாளர் விசா என்பது முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டது, அதேபோல் இந்த விசா வைத்துள்ளவர்கள் கட்டாயம் முதலீட்டுத் தொகை விசா காலம் முடியும் வரையில் நிர்வாகம் செய்ய வேண்டும் சந்தையில் இருந்து திரும்பப் பெற கூடாது.
இப்படியொரு பிரச்சனை
இதேபோல் இந்த வீசா மூலம் பலர் வயதான காலத்தில் வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை விடுத்துச் செட்டில் ஆக வேண்டும் என்பதற்காக மட்டுமே இத்தகைய விசா முறையைப் பயன்படுத்துகின்றனர். இதனால் அரசுக்கு தான் கூடுதல் சுமை ஏற்படுகிறது எனவும் கருத்து நிலவுகிறது.
Australian Govt may soon stop its millionaire’s visa; criticized as providing a fast track for wealthy Chinese
Australia Govt may soon stop its millionaire’s visa; criticized as providing a fast track for wealthy Chinese முதலீட்டாளர் விசா-வை நிறுத்த போகும் ஆஸ்திரேலியா.. சீனர்கள் தான் பிரச்சனையா..?