பதவியேற்பு விழாவில் உதவியாளரை பார்த்து ஆவேசமாக முகம் சுழித்த மன்னர்.
மன்னர் மூன்றாம் சார்லஸ்-ஸின் வீடியோ இணையத்தில் வைரல்.
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது அதிகாரப்பூர்வ பதவி பிரகடன விழாவில், மேசையை ஒழுங்குப்படுத்த உதவியாளரிடம் ஆவேசமாக சமிக்ஞை செய்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத் வியாழக்கிழமை உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
Charles covers up breaking wind at his accession by wafting and blaming the pen tray and ink for the eh, pen and ink. pic.twitter.com/ZfW3cNPMIN
— DimEagleBuckie 🏴🌱🇪🇺 ⚛️ 💛 🤝 💚 (@BuckieDim) September 10, 2022
இதனைத் தொடர்ந்து புதிய மன்னரை அதிகாரப்பூர்வ அறிவிக்கும் அணுகல் கவுன்சில் விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது, இதில் பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் ராயல் உதவியாளரிடம் முகம் சுழித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அணுகல் கவுன்சிலில் புதிய மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கான பிரகடனத்தில் கையொப்பம் இடுவதற்கு முன்பு மேசைக்கு வந்த புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் ராயல் உதவியாளரிடம் மேசையில் உள்ள பொருட்களை விரைவாக வெளியேற்றுமாறு ஆவேசமாக சமிக்ஞை செய்தார்.
மன்னர் கையொப்பம் இடுவதற்கான பெரிய ஆவணங்கள் வைக்க வேண்டிய இருந்த நிலையில், சிறிய மேசையில் பேனா பெட்டி மற்றும் இங்க்-பாட்டில் இரண்டையும் வைத்திருந்ததால் மன்னர் சார்லஸ் விரக்தியடைந்து உதவியாளரிடம் ஆவேசமாக சமிக்ஞை செய்தார்.
பதவியேற்பு விழாவில் இந்த மோசமான தருணம் பல சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்தது.
கூடுதல் செய்திகளுக்கு: ஆற்றல் நெருக்கடியை இணைந்து எதிர்கொள்வோம்: பிரித்தானிய, பிரான்ஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை
இது பலரது கண்களுக்கு நகைச்சுவையாக தெரிந்தாலும், சிலர் அதை கேலி செய்து வருகின்றனர்.