இந்தியாவில் எலக்ட்ரிக் கார் மோகம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் மலிவான விலையில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று தீவிரமாக உள்ளது.
எலக்ட்ரிக் வாகன சந்தையில் தற்போது பல நிறுவனங்கள் இருந்தாலும் டாடா மோட்டார்ஸ் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யும் 50 சதவீதத்திற்கும் அதிகமான எலக்ட்ரிக் வாகனங்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடையதாக உள்ளது.
இந்த வேளையில் டாடா மோட்டாரஸ், மாருதி சுசூகி தனது எலக்ட்ரிக் வாகன விற்பனையைத் துவங்குவதற்கு முன்பாகவே பெரிய வாடிக்கையாளர் கூட்டத்தைச் சேர்க்க திட்டமிட்டு உள்ளது.
காஃபி ஷாப்பில் ஆஃபீஸ்.. பெங்களூர் இளைஞர்கள் மழையால் திண்டாட்டம்..!
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் சில நாட்களுக்கு முன்பாகத் தனது 3வது எலக்ட்ரிக் வாகனமான டியாகோ EV காரை அறிமுகம் செய்தது. ஏற்கனவே நெக்சான் ஈவி மற்றும் டிகார் ஈவி கார்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், விலை அடிப்படையில் இந்த 2 மாடல்களைக் காட்டிலும் கீழ் இருக்கப்போவது புதிதாக அறிமுகம் செய்துள்ள டியாகோ EV.
10 எலக்ட்ரிக் கார் மாடல்
டாடா மோட்டார்ஸ் 2026-க்குள் 10 எலக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் டியாகோ EV இதில் 3வத மாடல் ஆகும். அடுத்தச் சில மாதத்தில் விற்பனைக்கு வர உள்ள டியாகோ EV காரின் விலை 10 லட்சம் ரூபாய்க்குக் கீழ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 லட்சம் ரூபாய் பட்ஜெட்
இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் பிராண்டுகளில் இதுவரையில் யாரும் 10 லட்சம் ரூபாய்க்கு எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்தது இல்லை, இப்படியிருக்கையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 10 லட்சம் ரூபாய் பட்ஜெட் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
டியாகோ EV கார்
டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே டிகார் ஈவி காரை 12.49 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வரும் நிலையில் 10 லட்ச ரூபாய் என்பது மிகப்பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான எலக்ட்ரிக் கார்கள் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Tata Motors new Tiago EV will be under Rs 10 lakh; Breakthrough price
Tata Motors new Tiago EV will be under Rs 10 lakh; Breakthrough price 10 லட்சத்திற்கு எலக்ட்ரிக் காரா..? டாடா-வின் திட்டம் என்ன..?