ராணி இறப்பிற்கு இளவரசர் லூயிஸ் கூறிய அழகான வார்த்தை: வேல்ஸ் இளவரசி கேட் பெருமிதம்


ராணி இரண்டாம் எலிசபெத் மரணம் தொடர்பாக இளவரசர் லூயிஸ் தெரிவித்த இனிமையான வார்த்தைகள்.


இளவரசர் லூயிஸ் வார்த்தைகள் அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது என இளவரசி கேட் பெருமிதம்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் இறப்பு தொடர்பாக இளவரசர் லூயிஸ் தெரிவித்த இதயம் தொடும் வார்த்தைகளை வேல்ஸ் இளவரசி கேட் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவை சுமார் 70 ஆண்டுகள் மற்றும் 214 நாட்கள் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுள்ளார்.

ராணி இறப்பிற்கு இளவரசர் லூயிஸ் கூறிய அழகான வார்த்தை: வேல்ஸ் இளவரசி கேட் பெருமிதம் | Kate Prince Louis Touching Words About Queen Death

இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தனது மாட்சிமையின் வாரிசாக அவரது மூத்த மகன் வில்லியம் மற்றும் மருமகள் கேட் ஆகிய இருவரையும் வேல்ஸின் இளவரசர் மற்றும் இளவரசியாக மன்னர் மூன்றாம் சார்லஸ் அறிவித்தார்.

இவை ஒருபுறம் இருக்க ராணியின் இழப்பிற்கு பிரித்தானிய  மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள அனைத்து தலைவர்களும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் இறப்பு தொடர்பாக இளவரசர் லூயிஸ் தெரிவித்த இதயம் தொடும் வார்த்தைகளை வேல்ஸ் இளவரசி கேட் பொதுவெளியில் தெரிவித்து அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளார்.

ராணி இறப்பிற்கு இளவரசர் லூயிஸ் கூறிய அழகான வார்த்தை: வேல்ஸ் இளவரசி கேட் பெருமிதம் | Kate Prince Louis Touching Words About Queen DeathINDIGOGETTY IMAGES

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உடல்நலக்குறைவு காரணமாக அவரது 96 வயதில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவர் இறந்த செய்தியை வேல்ஸ் இளவரசி கேட் தனது இளைய மகன் இளவரசர் லூயிஸ்-ஸிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு லூயிஸ் உடனடியாக வேல்ஸ் இளவரசி கேட்-யிடம், ”ராணி இப்போது கொள்ளு தாத்தாவுடன் இருக்கிறார்” என்று கூறி அனைவரையும் உணர்ச்சிப்பூர்வமாக மாற்றியுள்ளார்.

ராணி இறப்பிற்கு இளவரசர் லூயிஸ் கூறிய அழகான வார்த்தை: வேல்ஸ் இளவரசி கேட் பெருமிதம் | Kate Prince Louis Touching Words About Queen DeathSky News


கூடுதல் செய்திகளுக்கு: பதவி பிரகடன விழாவில் முகம் சுழித்த மன்னர் மூன்றாம் சார்லஸ்: வைரல் வீடியோ

இதனை அவர் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதுடன், இளவரசர் லூயிஸ் வார்த்தைகள் மிகவும் இனிமையாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.