தேசியப் புலனாய்வு அமைப்பின் 160 அதிகாரிகள் டெல்லி, என்.சி.ஆர், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியான நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் மூன்று பேர் மேற்குவங்கம் நேபாளம் எல்லையருகில் துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் நேபாள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவன் நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்ட சதி பற்றி வாக்குமூலம் அளித்துள்ளான். தொடர்ந்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் நிழல் உலக தாதாக்களை வேட்டையாட தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்