ஆஸ்திரேலியாவின் சிட்னி மக்களுக்காக மறைந்த மகாராணி 2ஆம் எலிசபெத், 1986ஆம் ஆண்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் சிட்னியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம் ஒன்றின், ரகசிய அறையில் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று ராணியை தவிர வேறு யாருக்கும் தெரியாது. குறிப்பாக, அதை இன்னும் 63 ஆண்டுகளுக்கு திறக்க முடியாது என்பதுதான் இதில் சுவாராஸ்யமானது.
1986ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், சிட்னி மேயருக்கு அந்த கடிதத்துடன், ‘எலிசபெத் ஆர்’ என்று கையெழுத்துடன் குறிப்பு ஒன்றையும் மகாராணி சேர்த்து அனுப்பியுள்ளார். அந்த குறிப்பில்,’வரும் 2085ஆம் ஆண்டில், நீங்கள் விருப்பப்படும் ஒரு நாளில், இந்த கடிதத்தின் உறையை பிரித்துப்பார்த்து, இதில் உள்ள தகவல்களை சிட்னி மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்’ என மகாராணி எழுதியுள்ளார்.
மேலும் படிக்க |மன்னர் சார்லஸின் வீங்கிய விரல்கள்… மருத்துவர்கள் கூறுவது என்ன..!!
எனவே, 1986ஆம் ஆண்டு எழுத்தப்பட்ட இந்த கடிதத்தை அடுத்த 99 ஆண்டுகள் கழித்தே திறந்துபார்க்க வேண்டும் என மகாராணி கூறியிருப்பதால், இதுவரை யாரும் அதை பிரித்துப்பார்க்கவில்லை. மேலும், அந்த கடிதத்தில் என்ன உள்ளது என்பது குறித்து மகாராணியின் நெருக்கமானவர்களுக்கு கூட தெரியாது. ஏனென்றால், அந்த கடிதம் ஒரு கண்ணாடி பெட்டகத்தில் வைக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான இடத்தில் உள்ளது. 36 ஆண்டுகளே தற்போது கழிந்துள்ள நிலையில், அந்த கடிதத்தை திறக்க இன்னும் 63 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவின் தலைவர் என்ற முறையில் மகாராணி 2ஆவது எலிசபெத் 16 முறை அங்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இருக்கிறார். மேலும், ஆஸ்திரேலியா மீது மகாராணிக்கு எப்போதும் சிறப்பு மதிப்பு இருந்து வந்தது என்றும் அவர் இங்கு சுற்றுபயணம் மேற்கண்ட போதெல்லாம் மக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பையும் அளித்தனர் என்றும் ஆஸி., பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மகாராணிக்கான தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். மகாராணியின் மறைவையொட்டி, ஆஸ்திரேலியாவின் பிரபல சிட்னி ஓப்ரா ஹவுஸ் நேற்று ஒளியூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மகாராணியின் மறைவுக்கு பிறகு மூன்றாம் சார்லஸ் அரசராக பதவியேற்றுள்ள நிலையில், அவர் ஆஸ்திரேலியாவின் தலைவராகவும் முறைப்படி தேர்வானார். கடந்த செப். 8ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் தனது 96 வயதில் இரண்டாம் எலிசபெத் மகாராணி காலமானார். அவரின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் இன்று தொடங்குகிறது.
மேலும் படிக்க | சாம்பலை பூசிக்கொண்ட கூகுள் – இதுதான் காரணம்…
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ