தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் தாக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 1720 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது வரவிருக்கும் அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவை பொறுத்து பெரியளவில் மாற்றம் இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை-யில் முக்கோன காதல்.. ஓரே நேரத்தில் 3..!
பணவீக்க தரவு?
பணவீக்கத் தரவின் எதிரொலி தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பணவீக்க தரவானது 8.1 VS 8.5% என்ற விகிதத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறையுமா? அல்லது மீண்டும் அதிகரிக்குமா? இதன் காரணமாக வட்டி விகிதம் அதிகரிக்குமா? என்ற பல கேள்விகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று குறைந்து காணப்படுகின்றது.
விலை எப்படியிருக்கும்?
ஒரு வேளை பணவீக்கம் அதிகரித்தால், நிச்சயம் மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பினை அதிகரிக்க இது தூண்டலாம். ஏற்கனவே மத்திய வங்கியின் தலைவர் பணவீக்கத்தினை குறைக்க அமெரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த தரவானது முதலீட்டாளர்கள் மத்தியில தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகின்றது.
டாலரின் மதிப்பு
வட்டி விகிதம் மீண்டும் அதிகரித்தாலும், அது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்க டாலரின் மதிப்பானது 108.90 என்ற லெவலில் காணப்படுகின்றது. ஆக மேற்கொண்டு டாலரின் மதிப்பில் ஏற்படும் தாக்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும்.
காமெக்ஸ் தங்கம் விலை?
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 3 டாலர்கள் குறைந்து, 1725.85 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கம் சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை.. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ள போதிலும், வெள்ளி விலை அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 0.59% அதிகரித்து, 18.878 டாலராக காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அமர்வின் உச்சத்தினை உடைத்துள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 59 ரூபாய் குறைந்து, 50,470 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்சம், குறைந்த விலையையும் உடைக்கவில்லை. விலை சற்று தடுமாறினாலும் மீண்டும் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 309 ரூபாய் அதிகரித்து, 55369 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வின் உச்சத்தினையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் இன்னும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 4725 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 37,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து, 5155 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,240 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, 51,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 60.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 605 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 60,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.47,250
மும்பை – ரூ.46,750
டெல்லி – ரூ.46,900
பெங்களூர் – ரூ.46,800
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.47,250
gold price on 12th September 2022: gold prices trade around near 1720 dollar
gold price on 12th September 2022: gold prices trade around near 1720 dollar