இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா பல நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் பிஸ்லெரி தண்ணீர் பாட்டில் நிறுவனத்திலும் டாடா முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
பிஸ்லெரி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பங்குகளை டாடா குழுமம் வாங்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை-யில் முக்கோன காதல்.. ஓரே நேரத்தில் 3..!
டாடா குழுமம்
டாடா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய பேக்கேஜ்டு வாட்டர் நிறுவனமான ரமேஷ் சவுகானுக்கு சொந்தமான பிஸ்லேரி இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிஸ்லெரி நிறுவனம்
டாடா குழுமம் பிஸ்லேரிக்கு சொந்தமான பங்குகளை கையகப்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
பிஸ்லெரி பங்குகள்
டாடா குழுமம் ஏற்கனவே டெட்லி டீ, எய்ட் ஓ க்ளாக் காபி, சோல்ஃபுல் தானியங்கள், உப்பு மற்றும் பருப்பு வகைகளை விற்பனை செய்து வரும் நிலையில் அடுத்தகட்டமாக பிஸ்லெரி பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நெளரிகோஷ் நிறுவனம்
டாடா நிறுவனம் ஏற்கனவே நெளரிகோஷ் என்ற தண்ணீர் பாட்டில் நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் தற்போது அதன் போட்டி நிறுவனமான பிஸ்லெரியின் பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
டாடா சொல்வது என்ன?
ஆனால் பிஸ்லெரி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது குறித்து டாடா நுகர்வோர் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியபோது, சந்தை ஊகங்கள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார். அதேபோல் பிஸ்லேரி இன்டர்நேஷனல் தலைவர் ரமேஷ் சவுகான் அவர்களும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக்கம் ஏற்படுமா?
பிஸ்லேரி நிறுவனம் இந்தியாவில் 150க்கும் மேற்பட்ட தண்ணீர் உற்பத்தி ஆலைகளையும், 5,000 டிரக்குகளுடன் 4,000க்கும் அதிகமான விநியோகஸ்தர்களின் வலையமைப்பையும் கொண்டுள்ளது. இந்த நிலையில் டாடா நிறுவனம் இந்நிறுவனத்துடன் இணைந்தால் இன்னும் அதிக விரிவாக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது.
Tata Group proposes to buy stake in Bisleri International
Tata Group proposes to buy stake in Bisleri International | பிஸ்லெரி இண்டர்நேஷனல் பங்குகள்.. டாடா குழுமம் எடுத்த அதிரடி முடிவு!