இப்பவே இப்படியா..! ரிலீஸுக்கு முன்பே 125 கோடி வசூல் செய்த பொன்னியின் செல்வன்?

சென்னை:
மணிரத்னம்
இயக்கியுள்ள
‘பொன்னியின்
செல்வன்’
திரைப்படம்,
வரும்
30ம்
தேதி
திரையரங்குகளில்
வெளியாகிறது.

விக்ரம்,
கார்த்தி,
ஜெயம்
ரவி,
ஐஸ்வர்யா
ராய்,
த்ரிஷா
என
மல்டி
ஸ்டார்
படமாக
பிரம்மாண்டமாக
உருவாகியுள்ளது
பொன்னியின்
செல்வன்.

இந்தப்
படம்
திரையரங்குகளில்
வெளியாகும்
முன்பே
125
கோடி
வசூல்
செய்து
சாதனை
படைத்துள்ளதாகக்
கூறப்படுகிறது.

காத்திருக்கும்
இந்தியத்
திரையுலகம்

தமிழ்த்
திரையுலகின்
கனவுத்
திரைப்படமான
பொன்னியின்
செல்வன்,
மணிரத்னம்
இயக்கத்தில்
தற்போது
சாத்தியமாகியுள்ளது.
30க்கும்
மேற்பட்ட
முன்னணி
நட்சத்திரங்களின்
நடிப்பில்
மிகப்
பெரிய
மல்ட்
ஸ்டார்
படமாக
உருவாகியுள்ள
பொன்னியின்
செல்வன்,
வரும்
30ம்
தேதி
திரையரங்குகளில்
வெளியாகிறது.
தமிழ்
மட்டுமின்றி
இந்தியத்
திரையுலகமே
இந்த
பிரம்மாண்ட
படைப்பைக்
காண
ஆர்வமாக
காத்திருக்கின்றனர்.

ரிலீஸ் முன்பே 125 கோடி வசூல்

ரிலீஸ்
முன்பே
125
கோடி
வசூல்

லைகா
தயாரிப்பில்
மிகப்
பெரிய
பட்ஜெட்டில்
உருவாகியுள்ள
‘பொன்னியின்
செல்வன்’,
பான்
இந்தியா
படமாக
5
மொழிகளில்
வெளியாகிறது.
இதனால்,
இந்தப்
படத்தின்
ஓடிடி
உரிமையை
கைப்பற்ற
கடும்
போட்டி
நிலவியது.
இறுதியாக
முன்னணி
ஓடிடி
நிறுவனமான
அமேசான்
ப்ரைம்,
பொன்னியின்
செல்வன்
உரிமையை
வாங்கியது.
குறிப்பாக
125
கோடி
ரூபாய்க்கு
பொன்னியின்
செல்வன்
வாங்கப்பட்டுள்ளதாக
தகவல்
வெளியாகியுள்ளது.

இரண்டு பாகங்களையும் வங்கிய அமேசான்

இரண்டு
பாகங்களையும்
வங்கிய
அமேசான்

பொன்னியின்
செல்வன்
முதல்
பாகம்
வரும்
30ம்
தேதி
வெளியாகவுள்ள
நிலையில்,
2ம்
பாகம்
அடுத்தாண்டு
வெளியாகும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்,
பொன்னியின்
செல்வன்
படத்தின்
இரண்டு
பாகங்களையும்
சேர்த்து
125
கோடி
ரூபாய்க்கு
அமேசான்
வாங்கியுள்ளதாக
கூறப்படுகிறது.
ரிலீஸ்க்கு
முன்பே
100
கோடி
வசூலை
எட்டியுள்ளதால்,
திரையரங்குகளில்
வசூல்
தாறுமாறாக
இருக்கும்
எதிர்பார்க்கப்படுகிறது.

சேட்டிலைட் உரிமைக்கும் கோடிகள் வியாபாராம்

சேட்டிலைட்
உரிமைக்கும்
கோடிகள்
வியாபாராம்

பொன்னியின்
செல்வன்
ஓடிடி
உரிமை
125
கோடிக்கு
விற்பனையானதாக
வெளியான
தகவல்
பலரையும்
வியப்பில்
ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே
படத்தின்
சேட்டிலைட்
உரிமைக்கும்
கடுமையான
போட்டி
நிலவியதாகவும்,
இப்போது
முன்னணி
தனியார்
தொலைக்காட்சி
வாங்கியுள்ளதாகவும்
சொல்லப்படுகிறது.
ஓடிடி
உரிமை
போன்றே
இங்கேயும்
பல
கோடிகளுக்கு
பிஸினஸ்
நடந்துள்ளதாக
தகவல்
வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.