பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மக்கள் கொண்டாடிய வெற்றி
நடப்பு ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது இலங்கை அணி. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை அணி. அதனை கொழும்பு நகர வீதிகளில் கொண்டாடி தீர்த்துள்ளனர் இலங்கை நாட்டு மக்கள்.அந்த நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. நாட்டு மக்கள் சொல்லி மாளாத துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு தங்கள் வலிகளை மறக்க செய்யும் மருந்தாக கிரிக்கெட் விளையாட்டு அமைந்துள்ளது. இப்போது அந்த அணி ஆசிய கோப்பையையும் வென்றுள்ளது.
அதிமுக அலுவலக சாவி: மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் விசாரணை
அதிமுக தலைமைக் கழக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அதிமுக அலுவலக சாவி எடப்பாடியிடம் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ் மேல் முறையீடு செய்துள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த ஜாமீன் நிபந்தனையில் தளர்வு வழங்கி, அவர் தமிழ்நாட்டில் எந்த இடங்களுக்கும் செல்ல்லாம் என அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பெரியார் சிலைகளின் கீழ் ‘கடவுள் இல்லை’ என்ற வாசகத்தை நீக்க உத்தரவிட கோரிய மேல்முறையீடு மனுவில், தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பண மோசடி வழக்கில் ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனு
காவல் நிலைய எல்லையைத் தாண்டி செல்லக்கூடாது என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் – ராஜேந்திர பாலாஜி தரப்பு
நிபந்தனையை தளர்த்தி விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு
காவல்துறையிடம் தெரிவித்து தமிழ்நாட்டுக்குள் பயணம் செய்யலாம் – உச்சநீதிமன்றம்
ராஜேந்திர பாலாஜிக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்தது உச்சநீதிமன்றம்
புதுச்சேரி, ஆரோவில்லில் இருந்து 20 பழங்கால சிலைகள், கலைப்பொருட்கள் பறிமுதல்
பிரெஞ்சு நாட்டவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல்
ஆபாச படங்கள், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு இடையில் உள்ளதை காவல் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தைக் ஆய்வு செய்யக்கோரிய வழக்கு
உலகிலேயே ஆபாச படங்களை அதிகம் பார்க்கும் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது – மனுதாரர்
உலகிலேயே இணையத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள்தான் என கூறி விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
முகச்சிதைவு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியாவின் கல்விச் செலவு முழுவதும் அரசே ஏற்கும் என அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
உத்தர பிரதேசம், நொய்டாவில் சர்வதேச பால்வள கூட்டமைப்பின் ‘உலக பால்வள உச்சிமாநாடு 2022’ தொடக்கம்
இந்திய எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் உச்சிமாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் மருத்துவமனையில் முகச்சிதைவு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டானியாவின் முகத்தையும் உயிரையும் காப்பாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்
கடலூர்: விருத்தாச்சலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை – போலீசார் விசாரணை
கரூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 5ஆம் வகுப்பு மாணவன் இளவியண்(10) உயிரிழப்பு. தாய் ரம்யா மருத்துவமனையில் அனுமதி
கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் 9வது நாளாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
கடந்த 3ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஆய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கோவிலில் உள்ள ஆபரணங்கள், காணிக்கையாக வந்த நகைகள் குறித்து ஆய்வு
மூன்று மாதத்தில் மூன்றாவது முறையாக நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்துள்ளேன். விளையாட்டு துறை வேகமாக செயல்பட்டு வருகிறது ; செஸ் ஒலிம்பியாட் போட்டி முடிந்த நிலையில் டென்னிஸ் போட்டி தொடங்க உள்ளது. சென்னை, பெரியமேட்டில் விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு இன்று காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் வரும் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் – பல்கலைக்கழகம் அறிவிப்பு
இந்தியாவில் மேலும் 5,221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. கடந்த 24 மணி நேரத்தில் 5,975 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர் – மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் 47,176 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சத்தீஸ்கர் :கோர்பா மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – 3 பேர் படுகாயம்
மக்கள் நலனை கருத்தில் கொண்டு மின் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நாளை பொறுப்பேற்ப.
புதுக்கோட்டை நகர் பகுதியில் 34 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது – 1,300 கிலோ குட்கா பறிமுதல்
பொங்கல் பண்டிகைக்கான ரயில் சேவை முன்பதிவு இன்று தொடக்கம். ஜனவரி 10ம் தேதிக்கான டிக்கெட்டுகளை இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் – தெற்கு ரயில்வே நிர்வாகம்
சென்னை : தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை – போலீசார் விசாரணை
சென்னை, ரிப்பன் மாளிகை அருகே கே.பி.பார்க்கில் வீடு வழங்க வலியுறுத்தி சாலையில் கூடாரம் போட்டு பொதுமக்கள் போராட்டம் கூடாரங்களை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம். போராட்டத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு