ஏன் சில்லறை பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பு.. விழாக்கால பருவத்தில் என்னவாகும்?

இந்தியாவில் பணவீக்கம் என்பது சமீபத்திய மாதங்களாகவே மீண்டும் குறையத் தொடங்கியிருந்தாலும், இன்னும் ரிசர்வ் வங்கியின் கணிப்புக்கு மேலாகவே இருந்து வருகின்றது.

இந்தியாவின் முதல் காலாண்டு சில்லறை பணவீக்க விகிதம் 7.28% ஆகும். இதனை ரிசர்வ் வங்கியானது 7.1% என்ற லெவலை தொடலாம் என கணித்திருந்தது.

நிர்மலா சீதாராமன் : பெட்ரோல் விலை குறைக்காத மாநிலத்தில் தான் பணவீக்கம் அதிகம்.. தமிழ்நாடு மாஸ்!

சில்லறை பணவீக்க வீக்க விகிதம்

சில்லறை பணவீக்க வீக்க விகிதம்

இந்த சில்லறை பணவீக்க வீக்க விகிதமானது, உணவு பொருட்கள் விலையானது ஏற்றம் கண்டுள்ள நிலையில் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் சில்லறை பணவீக்க விகிதமானது 5 மாதத்தில் இல்லாத அளவுக்கு 6.7% என்ற லெவலை எட்டியது. எனினும் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் உச்சம் எட்டியுள்ளது. இது மீண்டும் கவலையளிக்கும் ஒரு விஷயமாகவே மாறியுள்ளது.

மழையும் ஒரு காரணம்

மழையும் ஒரு காரணம்

இது மழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சப்ளை சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சில்லறை பணவீக்க விகிதமானது மீண்டும் உச்சம் எட்டியுள்ளது. குறிப்பாக பல உணவு பொருட்களின் விலை விகிதமானது கடந்த மார்ச் 2022ல் இருந்து மீண்டும் ஏற்றம் கண்டு வருகின்றது. இது 6.75%ல் இருந்து, 7.75% ஆக அதிகரித்துள்ளது.

அரசின் நடவடிக்கை
 

அரசின் நடவடிக்கை

ஒரு புறம் இந்த பணவீக்க விகிதங்களை குறைக்க அரிசி ஏற்றுமதி , கோதுமை மாவு, பருப்பு உள்ளிட்ட சிலவற்றிற்கு தடை விதித்துள்ளது. இதனால் ஏற்றுமதி குறைந்து, இருப்பு அதிகரிக்கும். இது விலையை கட்டுக்குள் வைக்க பயன்படும் என அரசு எதிர்பார்க்கிறது. இது தவிர பல ஏற்றுமதி பொருட்களுக்கும் வரியையும் அதிகரித்துள்ளது. இதுவும் ஏற்றுமதியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நம்பப்படுகிறது.

மத்திய வங்கியின் நடவடிக்கை

மத்திய வங்கியின் நடவடிக்கை

அரசின் நடவடிக்கை ஒரு புறம் எனில் மறுபுறம் மத்திய வங்கியும் பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க, வட்டி விகிதத்தினை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆர்பிஐ கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பணவீககத்தினை இரண்டாவது காலாண்டில் 7.1% ஆக குறையலாம் என கணித்திருந்தது. இது முன்னதாக 7.4% ஆக இருந்தது.

பண்டிகை காலத்தில்?

பண்டிகை காலத்தில்?

எனினும் இனி பண்டிகை காலம் தொடங்கவிருப்பதால் இந்த பணவீக்க விகிதமானது தொடரலாம் என்றும் நம்பப்படுகிறது. ஏனெனில் வெள்ளம் மற்றும் சீரறற்ற பருவமழை காரணமாக உணவு பொருட்கள் விலையில் தாறுமாறான மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

why retail inflation rate is rising despite ease wholesale price?

Rains have affected the supply chain in various parts of the country. Due to this, the retail inflation rate has again peaked.

Story first published: Monday, September 12, 2022, 14:57 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.