ஆசியக் கோப்பையில் அழகிய மர்மபெண்! ஒரே பதிவில் இணையத்தில் வைரல்.. இலங்கை அணிக்கு கூறிய வாழ்த்து


ஆசியக் கோப்பையை வென்ற இலங்கை அணிக்கு வாழ்மா அயோபி வாழ்த்து கூறினார்

இணையத்தில் வைரலான வாழ்மா அயோபிக்கு நாளுக்கு நாள் பின்தொடர்வோர் எண்ணிக்கை சமூக வலைதளத்தில் அதிகரித்து வருகிறது

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வைரலாகியுள்ளார்

ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதிய ஆசியக் கோப்பை போட்டியில், ஆப்கானுக்கு ஆதரவாக இளம்பெண்ணொருவர் தனது நாட்டின் கொடியை காட்டி நின்றார்.

மேலும் அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அவர், உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் தனக்கு பிடித்த இரண்டு அணிகள் விளையாடும் போட்டியை காண தவறவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலானது. அத்துடன் 2022 ஆசியக் கோப்பையின் மர்மப் பெண் என்று புகழப்பட்டார்.

தனது பதிவாலும், வசீகர தோற்றத்தினாலும் ஏராளமானோர் அவரை சமூக வலைதளத்தில் பின் தொடர தொடங்கினர்.

வாழ்மா அயோபி எனும் 28 வயதான அந்த பெண், ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். அந்நாட்டில் குடிமக்களை மோசமாக நடத்துவதற்கும், நாட்டில் அவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பாகுபாடுகளுக்கு எதிராகவும் அவ்வப்போது பேசி வரும் அயோபி, Laman Clothing என்ற பேஷன் லேபிளை நடத்தி வருகிறார்.

Wahma Ayoubi

Twitter

மேலும் மாணவியாகவும், தொழில் முனைவோராகவும் இருக்கும் அயோபி துபாய்க்கு இடம்பெயர்ந்தார்.

அவரது தோற்றம் மிகவும் பாராட்டப்பட்ட நிலையில் நெட்டிசன்கள் சிலர் இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே போட்டித் தொடரை நடத்துமாறு பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.    





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.