நடிகர்
வடிவேலுவின்
பிறந்த
நாள்
இன்று.
அவரது
திரை
வாழ்க்கையை
புரட்டிப்போட்ட
உதவி
இயக்குநர்
பற்றிய
சுவாரஸ்ய
தகவல்.
நடிகர்
வடிவேலுவுக்கு
ஆரம்பத்தில்
நடிகர்
ராஜ்கிரண்
பெரிய
அளவில்
உதவியுள்ளார்.
நடிகர்
கமல்ஹாசனும்
பெரிய
திருப்புமுனையை
ஏற்படுத்தியதாக
கூறியுள்ளார்.
ஆனால்
இவை
அனைத்தையும்
தாண்டி
வடிவேலுவிவின்
வாழ்க்கையை
புரட்டிப்போட்டது
ஒரு
உதவி
இயக்குநர்.
உள்ளங்கவர்
கள்வன்
வடிவேலு
சிந்திக்கும்
திறன்
உள்ள
யாரும்
நகைச்சுவையை
ரசிக்காமல்
இருக்க
முடியாது.
ஒவ்வொரு
காலக்கட்டத்திலும்
நகைச்சுவைக்காக
பல
ஜாம்பவான்கள்
உருவாகியுள்ளனர்.
காளி
என்
ரத்தினம்
தொடங்கி
என்.எஸ்.கிருஷ்ணன்,
சந்திரபாபு,
நாகேஷ்,
கவுண்டமணி
என
முன்னணியில்
புகழ்பெற்று
இருந்தவர்கள்
உண்டு.
பெயர்
சொன்னால்
பட்டியல்
பல
ஆயிரம்
வார்த்தைகளுக்கு
நீளும்
அளவுக்கு
நகைச்சுவை
நடிகர்கள்
பட்டியல்
உண்டு.
இதில்
90
களில்
சாதாரண
சிறிய
ரோலில்
வந்து
பின்னர்
தமிழ்
திரையுலகில்
பெரும்
ஆதிக்கம்
செலுத்திய
உள்ளம்
கவர்
கள்வன்
வடிவேலுவுக்கு
முக்கிய
இடம்
உண்டு.
இந்த
இடத்தை
அடைய
பட்டப்பாடு
சாதாரணமா
வடிவேலுவின்
கால்ஷீட்க்காக
பல
காத்திருக்கும்
நிலையில்
அந்த
நிலையை
அடைய
வடிவேலு
பட்ட
கஷ்டம்
கொஞ்ச
நஞ்சமல்ல.
வடிவேலு
திரைத்துறையில்
கால்
பதித்த
நேரத்தில்
கவுண்டமணி-செந்தில்
காமெடி
உச்சத்தில்
இருந்த
நேரம்.
வட்வேலுவே
பல
நேரம்
கவுண்ட
மணியிடம்
செந்திலுடன்
சேர்ந்து
உதை
வாங்கியிருப்பார்.
இரண்டு
மிகப்பெரிய
காமெடி
நடிகர்கள்,
ஜனகராஜ்
போன்றோர்
உச்சத்தில்
இருந்த
நேரம்
ஒடிசலான
கிராமத்து
இளைஞர்
வடிவேலு
மதுரை
பாஷையை
பேசி
கால்
பதித்தார்.
வாய்ப்பு
கேட்காமலே
வாய்ப்பளித்த
ராஜ்கிரண்
வடிவேலு
சினிமாவில்
நடிக்க
வாய்ப்புத்தேடி
அலையவில்லை.
அவருக்கு
வாய்ப்பு
கிடைத்ததே
ஒரு
சுவாரஸ்யமான
சம்பவம்
மூலமாகத்தான்,
87
ஆம்
ஆண்டு
தனது
ரசிகரின்
திருமணத்திற்காக
மதுரைக்கு
சென்று
இருந்தார்
ராஜ்கிரண்.
காலை
திருமணம்
முடிந்த
பிறகு,
அன்று
இரவு
தான்
அவருக்கு
ரயில்
என்பதால்
இரவு
ரயில்
ஏறும்
வரை
ராஜ்கிரணுக்கு
துணையாக
இருக்க
ஒரு
இளைஞரை
அவர்
அனுப்பி
வைத்தார்.
ஒடிசலாக
மதுரை
பாஷை
பேசிய
அந்த
இளைஞர்
ராஜ்கிரணுடன்
இருந்த
10
மணி
நேரத்தில்
அவரை
நகைச்சுவையாக
பேசிப்பேசியே
கவர்ந்துவிட்டார்.
அவர்
அடித்த
ஜோக்குகளால்
சிரிச்சு
சிரிச்சு
வயிறே
புண்ணாப்போச்சு
என
ராஜ்கிரண்
கூறியிருந்தார்.
ஆனால்
வடிவேலு
சினிமா
வாய்ப்பெல்லாம்
கேட்கவில்லை.
அதன்
பின்னர்
ராஜ்கிரண்
சென்னை
வந்துவிட்டார்.
வடிவேலுவை
தேடிய
ராஜ்கிரண்
இந்த
சம்பவம்
நடந்து
இரண்டு
மூன்று
வருடங்கள்
கழித்து
ராஜ்கிரண்
என்
ராசாவின்
மனசிலே
படத்தை
தயாரிக்கும்
நேரத்தில்
ஒரு
சின்ன
கதாபாத்திரத்துக்கு
ஆள்
தேவைப்பட
போது
டக்குன்னு
அவருக்கு
வடிவேலு
ஞாபகம்
வந்துள்ளது.
அந்தப்பய
இந்த
ரோலுக்கு
சரியா
இருப்பான்யா
புடி
அவனை
என்று
உதவியாளர்களிடம்
சொல்லியிருக்கிறார்.
ஆனால்
வடிவேலு
பற்றிய
எந்த
தகவலும்
அவர்களிடம்
இல்லை.
வடிவேலுவின்
நல்ல
நேரம்
ராஜ்கிரணுக்கு
வடிவேலுவைத்தவிர
வேறு
யாரையும்
போட
பிடிக்கவில்லை.
செல்போன்
இல்லாத
காலம்
அது.
திருமணத்துக்கு
அழைத்த
மதுரை
ரசிகரின்
அட்ரஸை
கஷ்டப்பட்டு
தேடி
எடுத்து
அவரை
தொடர்புக்கொண்டு
வடிவேலுவை
அழைத்து
பேசி
திண்டுக்கல்லுக்கு
ஷூட்டிங்க்கு
வரச்
சொல்லி
இருக்கிறார்.
இப்படித்தான்
என்
ராசாவின்
மனசிலே
படத்தில்
வாய்ப்பு
கிடைத்தது.
பாத்துண்ணே
படாத
இடத்தில்
பட்ற
போது..வடிவேலுவுக்கு
முன்னேற்றம்
தந்த
டைமிங்
என்
ராசாவின்
மனசில
படத்தில்
ஒரு
பாட்டு
பாடும்
காட்சி
வடிவேலுவுக்கு
கிடையாது
இரண்டே
இரண்டு
காட்சிதான்
வைத்திருப்பார்,
அதில்
ஒன்று
கவுண்டமணியிடம்
நலம்
விசாரித்து
உதவை
வாங்கும்
சீன்
அதில்
உதை
வாங்கும்போது
பாத்துண்ணே
படாத
இடத்துல
பட்ற
போதுன்னு
அடிவாங்கிகிட்டே
வடிவேலு
சொல்வார்.
இது
அவராக
பேசியது.
நல்ல
கிரியேட்டிவிட்டி
இருக்கிறது
என்று
சந்தோஷப்பட்ட
ராஜ்கிரண்
அவருக்கு
கூடுதல்
காட்சிகள்,
ஒரு
பாட்டு
சீனிலும்
நடிக்க
வாய்ப்பு
கொடுத்தார்.
வடிவேலுவின்
கிரியேட்டிவிட்டி
அவரை
அங்கு
வெல்ல
வைத்தது,
அது
வாழ்க்கை
முழுவதும்
அவரை
உயர
வைத்தது.
ராஜ்கிரண்
உதவியும்
வடிவேலுவின்
நன்றிக்கடனும்
ராஜ்கிரண்
படத்தில்
வாய்ப்பு
பின்னர்
தொடரவில்லை,
திரையுலகின்
கதவை
வடிவேலு
தட்டியும்
திறக்கவில்லை.
ராஜ்கிரண்
அலுவலகத்தில்
தங்கிக்கொள்ள
வடிவேலுவுக்கு
இடம்
கொடுத்து
உதவினார்
ராஜ்கிரண்.
(பின்
நாளில்
ராஜ்கிரணுக்கு
உதவி
நன்றிக்கடனை
செலுத்தினார்
வடிவேலு)
ஆனாலும்
வாய்ப்பு
கிடைக்காததால்
ஊருக்கு
கிளம்பிவிட்டார்
வடிவேலு.
இந்நிலையில்
சின்னகவுண்டர்
படத்தில்
விஜயகாந்துடன்
வரும்
ஒரு
வேலைக்காரன்
கேரக்டரில்
நடிக்க
ஆள்
தேவைப்பட்டபோது
வடிவேலுவுடன்
பழகிய
உதவி
இயக்குநர்
வடிவேலு
பற்றிச்
சொல்ல
அவரை
அழைத்து
வர
சொல்லியிருக்கிறார்கள்.
உதவி
இயக்குநர்
பல
இடங்களில்
தேடியும்
வடிவேலு
கிடைக்காததால்
அவரது
சொந்த
ஊருக்கே
சென்றுள்ளார்
அங்கு
அவர்
வடிவேலுவை
பார்த்து
விவரத்தைச்
சொல்லி
அனுப்பியுள்ளார்.
தேவர்
மகன்
திருப்புமுனை
ஏற்படுத்திய
படம்
வழிச்செலவுக்கு
பணம்
இல்லாத
நிலையில்
பணம்
கொடுத்து
உதவி
தன்
அறையிலும்
இடம்
கொடுத்து
உதவியதாகவும்
அதன்
பின்னர்
சின்னக்கவுண்டரில்
நடித்த
வடிவேல்
ஓரளவு
பார்க்கப்பட்டார்.
தன்
வாழ்க்கையில்
தேவர்
மகன்
படம்
முக்கிய
திருப்பத்தை
தந்தது
என
வடிவேலு
கூறியிருப்பார்.
கமல்ஹாசன்
தன்னை
மதித்து
ஒரு
ரோல்
கொடுத்தார்.
படம்
முழுவதும்
வரும்
ரோல்,
சிவாஜிகணேசனுடன்
நடிக்கும்
வாய்ப்பும்
இதனால்
கிடைத்தது.
இதன்
பின்னர்
தன்
திரை
வாழ்க்கையே
மாறிப்போனது
என்று
வடிவேலு
தெரிவித்திருப்பார்.
வடிவேலு
வாழ்க்கையில்
அவரது
மதுரை
நண்பரும்,
உதவி
இயக்குநரும்
பெரும்
பங்காற்றியுள்ளார்கள்,
இவர்கள்
தவிர
ராஜ்கிரண்,
கமல்ஹாசன்
உள்ளிட்டோரின்
உதவியும்
வடிவேலுவின்
திரைப்பயணத்தில்
முக்கிய
பங்கு
உண்டு.