திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே அரசு புறம்போக்கு நிலத்தை அபகரிக்க முயன்ற தாய், மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணி, அவரது மகன் விஜயபாஸ்கர் அரசின் 12 ஏக்கர் நிலத்தில் கம்பி வேலி அமைத்து கைப்படுத்தி வந்துள்ளனர். தகவலறிந்த நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.