பெங்களூரில் கடும் டிராபிக்.. காரை விட்டு இறங்கி 3 கிமீ ஓடிய டாக்டர்.. என்ன காரணம்?

பெங்களூரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் டிராபிக்கில் சிக்கிக் கொண்டதை அடுத்து அவர் குறித்த நேரத்தில் மருத்துவமனை செல்ல வேண்டும் என்பதற்காக காரில் இறங்கி ஓடி உள்ளார்.

இதுகுறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் கர்நாடகாவில் ஆட்சி மாறினாலும் பெங்களூரில் டிராபிக் பிரச்சானி மட்டும் மாறவில்லை என்று கூறப்படுகிறது.

கர்நாடகாவில் எந்த ஆட்சி நடந்தாலும் ட்ராபிக் பிரச்சனை மட்டும் தீரவே இல்லை என நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆப்பிள் நிறுவனமா இப்படி செய்தது.. காப்புரிமை மீறல் உண்மையா.. வழக்கு பதிவு செய்த மருத்துவர்..!

பெங்களூரு டிராபிக்

பெங்களூரு டிராபிக்

பெங்களூரில் டிராபிக் என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது என்பதும் கடந்த பல ஆண்டுகளாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும் டிராபிக் பிரச்சினை தொடர்ந்து கொண்டே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபத்தில் பெய்த மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்தது என்பதும் தெரிந்ததே.

அறுவை சிகிச்சை மருத்துவர்

அறுவை சிகிச்சை மருத்துவர்

இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி பெங்களூரில் கடும் மழை வெள்ளத்திற்கு இடையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மருத்துவர் ஒருவர் சிக்கி கொண்டார். அவர் குறிப்பிட்ட நேரத்தில் அறுவை சிகிச்சைக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவர் காரை விட்டு இறங்கி சுமார் 45 நிமிடங்கள் ஓட்டமும் நடையுமாக சென்று தனது அறுவை சிகிச்சையை நிறைவேற்றியுள்ளார்.

பித்தப்பை அறுவை சிகிச்சை நிபுணர்
 

பித்தப்பை அறுவை சிகிச்சை நிபுணர்

பெங்களூரில் உள்ள சார்ஜாபூர் என்ற பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் கோவிந்தராஜ் நந்தகுமார். இவர் அறுவை சிகிச்சை ஒன்றை செய்வதற்காக மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். பித்தப்பை அறுவை சிகிச்சை நிபுணரான இவர் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய காரில் சென்று கொண்டிருந்தபோது டிராபிக்கில் சிக்கிக் கொண்டார்.

3 கிமீ 45 நிமிடங்கள்

3 கிமீ 45 நிமிடங்கள்

உடனே அவர் தனது மொபைல் போனை எடுத்து கூகுள் மேப் மூலம் தனது மருத்துவமனை இருக்குமிடம் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதை தெரிந்து கொண்டார். உடனடியாக அவர் அதிரடி முடிவெடுத்து கார் டிரைவரிடம் காரை கொண்டு வருமாறு கூறிவிட்டு காரில் இருந்து இறங்கி ஓடினார். அப்போது அவர் எடுத்த வீடியோவில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து சீராகும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றும் அதனால் எனக்காக காத்துக் கொண்டிருக்கும் நோயாளிக்கு சிகிச்சை செய்ய நான் மருத்துவமனையை நோக்கி ஓடினேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது எனக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியாகவும் உள்ளது என்று அவர் கேலி செய்துள்ளார்.

சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை

சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை

காரில் இருந்து இறங்கி 3 கிலோ மீட்டர் தூரைத்தை அவர் 45 நிமிடங்களில் ஓட்டமும் நடையுமாக சென்று மருத்துவமனையை அடைந்த அவர் சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து நோயாளியின் உயிரை காப்பாற்றி இருக்கிறார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் பெங்களூரு மாநகரில் ஏற்பட்டுள்ள டிராபிக் தீர்வு பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் அரசு திணறி வருவதற்கு நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bengaluru doctor runs to hospital for emergency surgery after ditching car stuck in traffic

Bengaluru doctor runs to hospital for emergency surgery after ditching car stuck in traffic

Story first published: Monday, September 12, 2022, 17:43 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.