மாஸ் காட்டிய இந்திய ராணுவம்.. லடாக்கில் இந்தூஸ் நதி மீது கட்டப்பட்ட மெகா இரும்புப் பாலம் – வீடியோ

லடாக்: லடாக்கில் சீனவால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கும் சூழலில், அங்குள்ள பிரம்மாண்டமான இந்தூஸ் நதியின் மீது நவீன இரும்புப் பாலத்தை இந்திய ராணுவம் அமைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லடாக் எல்லை அருகே உள்கட்டமைப்புகளை சீனா மேம்படுத்தி வருவதாக கூறப்படும் நிலையில், இந்தியா தற்போது இந்த பாலத்தை கட்டமைத்திருப்பது கிழக்கு எல்லை பாதுகாப்பில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்த பாலத்தால் தற்போது சீன எல்லை வரை இந்திய ராணுவ வீரர்களால் தங்கள் தளவாடத்தையும், ஆயுதங்களையும் எளிதில் கொண்டு சென்று விட முடியும்.

தொடரும் சீன அச்சுறுத்தல்

லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது முதலாக, இந்தியாவின் கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. தொடர் ராணுவ நடவடிக்கைகள், பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னரே லடாக்கின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து சீன ராணுவம் தனது துருப்புகளை வாபஸ் பெற்றது. இருந்தபோதிலும், லடாக்கின் சில பகுதிகளில் இருந்து திரும்பிச் செல்ல சீன ராணுவம் மறுத்து வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக அந்நாட்டுடன் ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையை இந்தியா தற்போது வரை நடத்தி வருகிறது.

 உள்கட்டமைப்பை பெருக்கும் சீனா

உள்கட்டமைப்பை பெருக்கும் சீனா

இது ஒருபுறம் இருக்க, லடாக் அருகே இருக்கும் தங்கள் எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை சீனா பல மடங்கு அதிகரித்துள்ளது. சாலைகள், பெரிய அளவிலான மேம்பாலங்கள், ராணுவ முகாம்கள் உள்ளிட்டவற்றை சீனா அமைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதுவரை இல்லாத அளவுக்கு லடாக்கை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் தனது ராணுவப் படைகளை மூன்று மடங்காக சீனா அதிகரித்துள்ளது. தனது எல்லைப் பகுதிகளில் ராணுவ பலத்தை பெருக்குகிறோம் என சீனா கூறிக்கொண்டாலும், இந்தியாவுக்கு அந்நாடு தரும் எச்சரிக்கை சமிக்ஞையாகவே இதனை கருத வேண்டியுள்ளது. மேலும், சீனாவின் சமீபகாலமாக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இந்தியாவை குறிவைத்தே இருப்பதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தெற்கே இலங்கை, மேற்கே பாகிஸ்தான், கிழக்கே லடாக் எல்லை, வடகிழக்கில் அருணாச்சல பிரதேச எல்லை என நாலாபுறமும் சீனா தனது தடங்களை அழுத்தமாக பதித்து வருகிறது.

விழித்துக் கொண்ட இந்தியா

விழித்துக் கொண்ட இந்தியா

இந்நிலையில், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் விதமாக, இந்தியாவும் லடாக்கில் தனது ராணுவ பலத்தை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதேபோல, ராணுவ உள்கட்டமைப்பையும் அங்கு இந்தியா மேம்படுத்தி வருகிறது. இதுவரை மலைகளை சுற்றி பல மணிநேரம் செல்ல வேண்டிய இடங்களுக்கு சில நிமிடங்களிலேயே சென்று சேரும் வகையில் அங்கு புதிய சாலைகளை இந்தியா கட்டமைத்துள்ளது. அதேபோல, லடாக்கில் நிலவும் குளிரை தாங்கும் வகையில் பிரத்யேக முகாம்களையும் இந்தியா கட்டியுள்ளது.

நவீன இரும்புப் பாலம்

நவீன இரும்புப் பாலம்

அந்த வகையில், லடாக்கில் மிகப்பெரிய நதியான இந்தூஸில் தற்போது புதிய பாலத்தை இந்திய ராணுவம் அமைத்துள்ளது. முதலில், இந்த நதியின் மீது சாதாரண பாலம் அமைக்க இந்திய ராணுவத்தினர் முடிவு செய்தனர். ஆனால் அங்கு நடைபெற்ற மண் சோதனையில் பெரிய பாலத்தை அங்கு கட்ட முடியாது எனத் தெரியவந்தது. இதையடுத்து, இங்கு பாலம் கட்ட புதிய தொழில்நுட்பத்தை நமது ராணுவ பொறியாளர்கள் ஆய்வு செய்து வந்தனர்.

வைராகும் வீடியோ

வைராகும் வீடியோ

அதன்படி, கண்டெய்னர் அளவுக்கு இரும்புத் துண்டுகளை பிரத்யேமாக வடிவமைத்து அவற்றை நதியின் மீது அடுக்காக போட்டு, பின்னர் அவற்றை இணைத்து வலுவான இரும்புப் பாலத்தை இந்திய ராணுவம் உருவாக்கியுள்ளது. இந்தப் பாலத்தின் மீது ராணுவ கனரக வாகனங்கள் செல்லும் வீடியோவை இந்திய ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டது. இந்த பாலம் அமைக்கப்பட்டதால், லடாக்கின் சீன எல்லை வரை இந்திய ராணுவத்தால் எளிதில் ஆயுதங்களையும், தளவாடங்களையும் எடுத்துச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.