Samsung Galaxy Ultra S23 : 200MP கேமரா வசதியோடு வெளியாக போகும் சாம்சங் மொபைல்

சமீபத்தில்தான் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா 200MP கேமரா அம்சத்தோடு வெளியாக போவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சாம்சங் கேலக்சி அல்ட்ரா S23யும் 200MP கேமராவோடு வெளியாக உள்ளதாக டெக் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

டெக் துறையில் முன்கணிப்பில் வல்லுனரான IceUniverse சமீபத்தில் சாம்சங் குறித்து புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்னும் சில மாதங்களில் வெளியாக இருக்கும் சாம்சங் கேலக்சி அல்ட்ரா S23யில் இடம்பெறப்போகும் மெயின் கேமரா 200MP ISOCELL சென்சார் என்று தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது f/1.7 aperture-வோடு 1/1.3” சென்சாருக்குள் 0.6µm பிக்ஸல்ஸ் என்ற வகையில் இடம்பெற உள்ளது.

மேலும் இது தற்போது சந்தையில் இருக்கும் ISOCELL HP1 மற்றும் ISOCELL HP3-யிலிருந்து கொஞ்சம் வேறுபட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ISOCELL HP1 சென்சாரில் 1/1.22″ 0.64µm பிக்ஸல்ஸ் மற்றும் IS OCELL HP3 1/1.4″ 0.56µm பிக்ஸல்ஸ் என்ற வகையில் இருக்கும். எனவே, இந்த புதிய சென்சார் இது இரண்டுக்கும் இடையிலான செயல்பாட்டோடு இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

இது மட்டுமின்றி சாம்சங் கேலக்சி அல்ட்ரா S23யின் பேட்டரி 5000mAh திறன் மற்றும் பெரிய அளவிலான ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்கள் என பல பிரமாண்டமான சிறப்பம்சங்கள் வர போவதாக எதிர்பார்க்க படுகிறது.

இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட தொடக்கத்திற்குள் இந்த மொபைல் விற்பனைக்கு வரலாம் என்றும் பல்வேறு டெக் நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆனால், இது குறித்து சாம்சங் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.