பெர்லின்: உலகின் டாப் பணக்காரரான எலான் மஸ்கையே ஜெர்மனி நாட்டில் இருக்கும் ஒரு நைட் கிளப் உள்ளே விடவில்லை என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை.
பணம் எல்லா கதவுகளையும் திறந்துவிடும் என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் இந்த கதவை எவ்வளவு பணம் இருந்தாலும் திறக்க முடியாது.
26,370 கோடி டாலர் மதிப்புடைய சொத்து மதிப்பு கொண்ட உலக பணக்காரர் எலான் மஸ்கையே இந்த நைட் கிளப் உள்ளே விடவில்லை. அப்படி என்ன தான் இதில் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
ஜெர்மனி
உலகில் ஏகப்பட்ட நைட் கிளப்கள் இருந்தாலும் ஜெர்மனியில் உள்ள இந்த நைட் கிளப்கள் தனித்துவமானது. ஜெர்மனி தலைநகர் பெர்லின் அமைந்துள்ள இந்த நைட் கிளப்பில் உள்ளே நுழைவது அவ்வளவு எளிமையான விஷயம் இல்லை. உலக புகழ்பெற்ற இந்த பெர்கெய்ன் (Berghain) நைட் கிளப் மிகக் கடுமையான விதிகளைக் கொண்டது. எவ்வளவு கோடி இருந்தாலும் இந்த நைட் கிளப்பில் ஈஸியாக உள்ளே நுழைய முடியாது. அதற்கு எலான் மஸ்க் தான் உதாரணம்.
ஸ்வென் மார்க்வார்ட்
ஒவ்வொரு நாளும் இந்த நைட் கிளப்பில் நுழைய மக்கள் வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். அப்போதும் கூட அனைவராலும் உள்ளே செல்ல முடியும் என உறுதியாகக் கூற முடியாது. அங்கு பவுன்சராக உள்ள ஸ்வென் மார்க்வார்ட் என்பவர் தான் உள்ளே யாருக்கு அனுமதி? யாருக்கு அனுமதி இல்லை என்பதை முடிவு செய்வார். இந்த பவுன்சரே பிரபலம் தான். உலகின் பல முன்னணி நாளிதழ்களும் இவரிடம் பேட்டி எடுத்துள்ளன.
உடை
ஸ்வென் மார்க்வார்ட் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை என்றால் சத்தமில்லாமல் அங்கிருந்து வந்து விட வேண்டுமாம். இல்லையென்றால் எப்போதும் உள்ளே நுழைய முடியாத நிலைய ஏற்படுமாம். அதேநேரம் சில குறிப்பிட்ட விஷயங்களைப் பின்பற்றினால் பெர்கெய்ன் நைட் கிளப்பில் நுழைய வாய்ப்புள்ளது. அதுவும் கூட உறுதியாகச் சொல்ல முடியாதாம். முதலில் கறுப்பு நிறத்தில் உடைய அணிய வேண்டும். கறுப்பு இல்லை என்றால் டார்க் நிறங்களில் உடை அணிய வேண்டும்.
விதிகள்
அடுத்து மது குடித்து இருந்தால் இந்த நைட் கிளப்பில் அனுமதி இல்லை. பெரும்பாலான நைட் கிளப்களில் இது தான் விதி என்றாலும் இங்கு அதை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுவார்கள். இந்த நைட் கிளப்பில் பொதுவாகவே நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டி இருக்கும். அப்போது அமைதியாக நிற்க வேண்டும், லைனை கட் செய்யவோ, காசு கொடுத்து முன்னால் செல்லவோ முயன்றால் கண்டிப்பாக இதில் அனுமதி இல்லையாம்.
எலான் மஸ்க்
சரி எலான் மஸ்க் விஷயத்திற்கு வருவோம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் டெஸ்லா நிறுவன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஜெர்மனி சென்று இருந்தார். பெர்லினில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், இந்த பெர்கெய்ன் நைட் கிளப்பிற்கும் சென்றுள்ளார். இருப்பினும், அங்கு அவரை அனுமதிக்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. ஆனால், இதை மறுத்த எலான் மஸ்க் பெர்கெய்ன் நைட் கிளப் சுவரில் “Peace” என எழுதப்பட்டு இருந்ததாகவும் இதனால் நான் தான் உள்ளே செல்ல மறுத்துவிட்டேன் என கூறி இருந்தார்.
மறுப்பு
இருப்பினும், இதில் எது உண்மை என யாருக்கும் தெரியாது. கிளப்பில் நடக்கும் விஷயங்கள் தொடர்பாக வெளியே பேசக்கூடாது என்று மிகவும் ஸ்ட்ரிட்டான கொள்கையை இந்த கிளப் பின்பற்றுவதால் என்ன நடந்தது என உறுதியாகத் தெரியவில்லை. அதேநேரம் எலான் மஸ்கின் திமிர் தனமான நடவடிக்கை காரணமாக அவருக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இருக்கலாம் என்றே பலரும் கூறுகின்றனர்.
ஃபோட்டோ
இப்படி உள்ளே நுழையவே பல விதிகளைக் கொண்டு இருக்கும் நைட் கிளப்பில் உள்ளே எப்படி இருக்கும் தெரியுமா? துரிதிஷ்டவசமாக உள்ளே ஃபோட்டோ எடுக்க அனுமதி இல்லையாம். ஸ்மார்ட்போன்களில் கூட கேமராக்களில் ஸ்டிக்கர் ஓட்டப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும். உள்ளே ஃபோட்டோ எடுக்கப்படுவது கண்டறியப்பட்டால் உடனடியாக அது டெலிட் செய்யப்பட்டு, வெளியேற்றப்படுவார்கள்.
எப்படி இருக்கும்
அதேநேரம் உள்ளே எப்படி இருக்கும் என்பது குறித்து சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்த கிளப்பில் வெளிப்படையாகவே பல பாலியல் சம்பவங்கள் நடைபெறும். இதற்காக அங்குப் பல தனி டார்க் ரூம்கள் உள்ளன. இதில் தான் அங்கு வருபவர்கள் உடலுறவு கொள்ளாவார்களாம். மேலும், இந்த கிளப்பில் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரு முறை ஸ்னாக்ஸ் பார்ட்டி என்று தன்பால் ஈர்பாளர்களுக்கு தனி பார்டி நடத்தப்படுமாம்.