கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி பகுதியில் ஷாலினி என்ற பெண்ணுக்கு நான்காண்டுகளுக்கு முன் திருமணமானது. கடந்த 2018-ல் தனராஜ் என்ற இளைஞருடன் ஷாலினிக்கு திருமணமான நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது.
கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்ப்படுவது வழக்கம். அதனால், ஷாலினி கடந்த இரண்டு வருடங்களாக தனது தாயின் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி கணவர் வீட்டுக்கு ஷாலினி வந்துள்ளார். நீண்ட நாட்கள் கழித்து கணவர் வீட்டுக்கு ஷாலினி வந்த நிலையில் மீண்டும் தகராறு நடந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஷாலினி அங்கிருந்து வந்த 14வது நாளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஷாலினியின் உடல் பிரேர பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருமணமான நான்கு ஆண்டுகளில் கைக்குழந்தையை அனாதையாக விட்டுவிட்டு அந்த தாய் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.