விஜய் 67 வில்லனின் கெட் அப் தெரியுமா?…

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் ‘வாரிசு’ படத்தின் பணிகளில் நடிகர் விஜய் தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறார்.  தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில்  ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, யோகி பாபு, சங்கீதா கிரிஷ் மற்றும் சம்யுக்தா போன்ற பலர் நடித்து வருகின்றனர்.  சமீபத்தில் சரத்குமாரை நடிகர் விஜய் மருத்துவமனையில் அனுமதிப்பது போன்ற இமோஷனல் நிறைந்த காட்சி படமாக்கப்பட்டது, அதில் நடிகர் பிரபு மருத்துவராக நடித்திருந்தார்.  

வாரிசு படம் பற்றிய அப்டேட்டுகள் அடிக்கடி வந்தாலும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பது என்னவோ ‘தளபதி 67’தான்.  லோகேஷ் இயக்கத்தில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 67’ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது, அதேசமயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மென்மேலும் தூண்டிவிடும் வகையில் இப்படம் குறித்த தகவல்கள் பல அடுக்கடுக்காக வெளியாகிக்கொண்டே இருக்கிறது.  

இப்படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் இருப்பதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியானது.  வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரித்விராஜ் சுகுமாரன், சஞ்சய் தத் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இயக்குநர் கௌதம் மேனனும் படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

Sanjay Dutt

இந்நிலையில் விஜய் 67 படத்தில் நடிக்க சஞ்சய் தத்திற்கு ரூ.10 கோடி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் அவர் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ‘கேஜிஎஃப் 2’ படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் திரையுலகை ஈர்க்கும் வகையிலும், விஜய்யின் செல்வாக்கை வடக்கிலும் கூட்டும் வகையிலும் சஞ்சய் தத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திரை பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.