சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத அண்ணாமலை தமிழகத்தில் ஆட்சியை கவிழ்ப்பாரா என தெலுங்கானா சட்டமன்றத்தில் சந்திர சேகர ராவ் அண்ணாமலையை கலாய்த்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக பேசிய அண்ணாமலை “ மகாராஷ்ட்ராவில் எக் நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆட்சியை கலைத்ததைப் போல தமிழகத்திலும் திமுக ஆட்சியை ஒரு ஏக நாத் ஷிண்டே புறப்பட்டு வந்து கலைப்பார்” என அண்ணாமலை பேசியது சர்ச்சையானது.
இதனிடையில் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவருமான சந்திர சேகர ராவ், பாஜகவை தேசிய அளவில் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
பாஜகவிற்கு எதிராக மாநில கட்சிகளை ஒன்று திரட்டும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேசிய கட்சியை விரைவில் தொடங்க போவதாகவும் சந்திரசேகர் ராவ் குறிப்பிட்டு இருந்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க சந்திர சேகர ராவ் முயற்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில் அண்ணாமலையை குறிப்பிட்டு பேசிய சந்திர சேகர ராவ் , தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கவிழ்க்க போவதாக அண்ணாமலை கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்தும் ஏக்நாத் ஷிண்டே வர போவதாக அண்ணாமலை சொல்லி வருகிறார் .
அண்ணாமலையால் அவரின் சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. சொந்த தொகுதியில் வெற்றியை பெற முடியாத அண்ணாமலை தான் தமிழ்நாட்டில் ஆட்சியை கவிழ்க்க போவதாக கூறுகிறார் .” என்று சந்திர சேகர ராவ் அண்ணாமலையை கலாய்த்துள்ளார்.
மேலும் பேசிய அவர் பாஜக விற்கு தெரிந்தது எல்லாம் ஏக் நாத் ஷிண்டே வகை தந்திரம் தான். அவர்களால் ஒரு போதும் நேர்மையாக வெற்றி பெற முடியாது என்று பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருள் ஆகியுள்ளது .