திருவனந்தபுரம்: கேரள சட்டசபை சபாநாயகராக இருந்த ராஜேஷ் உள்ளாட்சித் துறை அமைச்சராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதனால் சபாநாயகர் பதவி காலியானது. தொடர்ந்து புதிய சபாநாயகராக தலச்சேரி தொகுதி எம்எல்ஏவான ஷம்சீரை நியமிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கமிட்டி தீர்மானித்தது. இந்த நிலையில் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று நடந்தது.
இடது முன்னணி சார்பில் ஷம்சீரும், காங்கிரஸ் கூட்டணி சார்பில் அன்வர் சாதத்தும் போட்டியிட்டனர். இதில் ஷம்சீருக்கு 96 ஓட்டுகளும், அன்வர் சாதத்துக்கு 40 ஓட்டுகளும் கிடைத்தன. அதைத் தொடர்ந்து புதிய சபாநாயகராக ஷம்சீர் தேர்வு செய்யப்பட்டார்.