இன்னும் 145 நாள்கள்தான்.. படிப்படியாக முன்னேறுகிறோம்.. காக்கி அரை டவுசருக்கு நெருப்பூட்டிய காங்கிரஸ்..!

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா (இந்திய ஒற்றுமை யாத்திரை) நடைபயணம் மேற்கொண்டுவரும் நிலையில் காங்கிரஸின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ட்விட்டர் பக்கத்தில் ஆர்எஸ்எஸ்-ஐ விமர்சித்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தது.

அந்தப் புகைப்படத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் முன்னாள் சீருடையான அரை காக்கி டவுசர் (அரை காக்கிச் சட்டை) தீப்பற்றி எரிவது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. “வெறுப்பில் இருந்து விடுபடுவதற்கும் பாஜக-ஆர்எஸ்எஸ் கேடுகளை திரும்ப பெறுவதற்கும் காலம் நெருங்கி விட்டது. படிப்படியாக முன்னேறுகிறோம். இன்னும் 145 நாள்கள்தான்” எனக் கூறப்பட்டிருந்தது.

இது வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. நாட்டில் வன்முறை என்னும் தீயை கொளுத்துவது காங்கிரஸ்தான். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் அது அம்பலமானது எனவும் பாஜக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் வைத்யா, “அவர்கள் (காங்கிரஸ்) மக்களை வெறுப்புணர்வுடன் இணைக்க முயல்கின்றனர்.

நீண்ட காலமாக அவர்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்எஸ்எஸ் மக்களோடு இணைவதை தடுக்க முயன்றனர். ஆனால் ஆர்எஸ்எஸ் மக்களின் ஆதரவை தொடர்ந்து பெற்று, வளர்ந்துகொண்டே வருகிறது” என்றார்.

இதற்கிடையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “ வெறுப்பு, மதவெறி மற்றும் தவறான எண்ணங்களை மக்களிடம் விதைப்பவர்கள், அவற்றை திரும்ப பெற காலம் வரும் என்பதையும் உணர வேண்டும். ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு காங்கிரஸ் ஆக்ரோஷமான பதில்களை அளிப்பதில்லை. ஆனால் அவர்கள் ஆக்ரோஷமாக இருந்தால் நாங்கள் இரட்டை ஆக்ரோஷமாக இருப்பார்.

இதற்கிடையில் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா, “ராகுல் காந்தி நடத்துவது ஒற்றுமை யாத்திரை அல்ல, தேசியவாதிகளை புண்டுத்தும் யாத்திரை” என்றார். மேலும் காங்கிரஸின் ட்வீட்களை அவமானகரமானது என்றார்.

பாஜக தகவல் தொழில்நுட்பத் தலைவர் அமித் மாளவியா, “காங்கிரஸ் 5 நாள்களில் தனது அகோர பற்களை வெளிப்படுத்திவிட்டது. நெல்லை முதல் பாகல்பூர் வரை, கைர்லாஞ்சி முதல் கோத்ரா வரை, ஹாஷிம்புரா முதல் சீக்கிய இனப்படுகொலை வரை, வன்முறையில் செழித்து வளர்ந்த ஒரு கட்சி, ஒருபோதும் ஜோடோ பாரத் ஆக முடியாது.
காங்கிரஸ் ஒரு பேய். வரலாற்றில் குப்பைத் தொட்டியில் போடுவதற்கு தயாரான ஒரு கட்சி காங்கிரஸ்” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பி.,யான பிரகாஷ் ஜவடேகர், “ஆர்எஸ்எஸ் பழைய சீருடைய பகிர்ந்து வன்முறையை தூண்டும் விதத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் வீடியோ பகிர்ந்துள்ளது கண்டிக்கத்தக்கது.
இது தேசப்பக்தி மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்” என்றார்.

தேஜஸ்வி சூர்யா ட்விட்டரில், “1984இல் காங்கிரஸ் டெல்லியை எரித்தது. 2002இல் கோத்ராவில் 59 கரசேவர்களை உயிருடன் எரித்தது. ஆனால் காங்கிரஸ் ஊட்டிய நெருப்புகள் அவர்களை எரித்துள்ளன.
தற்போதும் ஒரு நெருப்பை மூட்டியுள்ளது. இது ராஜஸ்தான், சத்தீஸ்கரில் எஞ்சியிருப்பவைகளை எரித்து சாம்பலாக்கும்” என்றார்.

தெலங்கானா பாஜக செயற்குழு உறுப்பினர் ராமச்சந்தர் ராவ், “பாரத் ஜோடா யாத்திரை அல்ல மிஷனரிகள் யாத்திரை” என்றார். காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜிதின் பிரசாத், “அரசியல் வேறுபாடுகள் இயல்பானவை. ஆனால் எதிர்மறை மற்றும் வெறுப்பை அனைவரும் கண்டிக்க வேண்டும்” என்றார்.

கபில் மிஸ்ரா, அனுமனின் வாலை எரிப்பது முன் ராவணன் அறிந்திருக்கவில்லை. பின்னர் இலங்கை முழுவதும் எரிந்தது. அதேபோல் காங்கிரஸிற்கும் நடக்கும்” என்றார். டெல்லி பாஜக இளம் தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா, “1984இல் சீக்கியர்களை கொன்றார்கள், 2002இல் இந்துக்களை கொன்றார்கள். காங்கிரஸ் நாட்டை எரிக்கிறது” என்றார்.

இதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் அந்தமான் நிக்கோபார் பிரிவின் தேசியத் தலைவரும் சீக்கிய படுகொலையை நினைவு கூர்ந்து ட்வீட் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.