ரன் திரைப்படத்தில் இடம் பெற்ற \"காதல் பிசாசு\"பாடல் எப்படி உருவானது என்று தெரியுமா?

சென்னை: இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ஆனந்தம்’என்ற திரைப்படத்தின் மூலம் தான் கவிஞர் யுகபாரதி பாடல் ஆசிரியராக அறிமுகமானார்.

யுகபாரதியின் முதல் பாடலான “பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்” மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

நீண்ட இடைவெளிக்கு பின்பு திரும்பவும் லிங்குசாமி , ரன் என்ற திரைப்படத்திற்காக யுகபாரதியே பாடல் எழுத சொல்லி இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்,அந்த ஸ்டூடியோவில் நடந்த சில சுவாரசியமான தகவல்களை ஒரு மேடையில் யுகபாரதி பகிர்ந்துள்ளார்.அப்படி அங்கு என்ன நடந்தது என்பதனை இந்த கட்டுரையில் பார்ப்போம்..!

யுகபாரதியின் முதல் பாடல் ஹிட்

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ஆனந்தம்’என்ற திரைப்படத்தில் இடம்

பெற்ற

“பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்” என்ற பாடல் மூலம் யுகபாரதி பாடல் ஆசிரியராக அறிமுகமானார், பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

நடிகை சினேகா இந்த பாடலுக்கு ஒரு ரூபாய் நாணயம் வைத்து நடனம் ஆடி இருப்பர்.

8 மாதங்களாக வாய்ப்பு கிடைக்கவில்லை

8 மாதங்களாக வாய்ப்பு கிடைக்கவில்லை

“பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்” பாடலின் வெற்றிக்கு பிறகு 8 மாதங்களாக எந்த ஒரு இயக்குனரும் பாடல் எழுத வாய்ப்பு தரவில்லை. திடீரென்று லிங்குசாமி யுகபாரதியே அழைத்து பேசிக் கொண்டிருந்த போது உங்களுக்கு ஏன் வேற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கேட்டிருக்கிறார் அதற்கு யுகபாரதி அதுதான் எனக்கு தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார், சரி நான் ‘ரன்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளேன் அந்த திரைப்படத்தில் பாடல் எழுத நாளை இசையமைப்பாளர் வித்தியாசகரை சந்திப்போம் என்று கூறினார்.

இசையமைப்பாளர் வித்யாசாகரின் சந்திப்பு

இசையமைப்பாளர் வித்யாசாகரின் சந்திப்பு

இயக்குனர் லிங்குசாமியும் கவிஞர் யுகபாரதியும் இசையமைப்பாளர் வித்யாசாகரை சந்திக்க அவருடைய ஸ்டுடியோக்கு சென்றிருந்தனர், அந்த சமயத்தில் யுகபாரதியின் கையில் இருந்த தமிழக அரசு பரிசு பெற்ற கவிதை தொகுப்பு வித்யாசாகரிடம் கொடுத்திருக்கிறார் ஆனால் வித்யாசாகர் இடது கையில் புத்தகத்தை வாங்கி மேசையின் மீது தூக்கி எறிந்துயுள்ளர். இதைப் பார்த்த யுகபாரதிக்கு கடும் கோபம் ஏற்பட்டது, இதை தொடர்ந்து லிங்குசாமி வித்யாசாகரிடம் “பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்”என்ற இவர் எழுதிய பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதனால் இந்த படத்திலும் இவர் ஒரு பாடல் எழுத வேண்டும் என்று அழைத்து வந்துள்ளேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அந்த பாடலை கேட்காதவர் போல அமர்ந்திருக்கிறார் வித்யாசாகர், யுகபாரதிக்கு ஒன்னும் புரியவில்லை. ஏனெனில் அந்தப் பாடல் மிகவும் பிரபலமான பாடல் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அந்த பாடலை கேட்காதவர்கள் எவரும் இருந்திருக்க மாட்டார்கள்.

யுகபாரதி இசையமைப்பாளரிடம் பாராட்டு பெற்றார்

யுகபாரதி இசையமைப்பாளரிடம் பாராட்டு பெற்றார்

வித்யாசாகர் யுகபாரதியை பார்த்து அது என்ன “பல்லாங்குழியில் வட்டம்”பல்லாங்குழி குழி வட்டம் தானே என்று யுகபாரதியிடம் கேட்டிருக்கிறார், பதிலுக்கு ஐயா இதெல்லாம் ” நிலா போல முகம் தாமரை போல முகம்” அந்த மாதிரி ஒரு ஒப்புமைக்கு சொல்லுவது என்று பதில் சொல்லி இருக்கிறார். இருவரையும் சமாதானப்படுத்திய லிங்குசாமி ஒரு வழியாக பாடல் எழுத அனுமதி அளித்துள்ளார் கவிஞர் யுவபாரதிக்கு, பாடல் சூழ்நிலையே வித்யாசாகர் விளக்கிய போது இது ஒரு காதல் பாடல் ஆனால் ‘அன்புள்ள, கண்மணி,காதல் , கடிதம், நான் இங்கு நலமே, நீ அங்கு நலமா, என்ற வார்த்தைகள் எல்லாம் வரக்கூடாது என்று சொல்லி இருந்திருக்கிறார், மறுநாள் காலையில் கவிஞர் யுகபாரதி “காதல் பிசாசு காதல் பிசாசு ஏதோ சவுக்கியம் பரவாயில்லை” என்ற பாடலை கொடுத்த போது வித்யாசாகர் பாடலை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து இனி நான் இசையமைக்கும் எல்லா திரைப்படத்திலும் உங்கள் பாடல் இருக்கும் என்று சொல்லி அனுப்பி இருந்திருக்கிறார், பிறகு வந்த நாட்களில் வித்யாசாகர் இசையமைத்த படங்களில் ஏறத்தாழ 300 பாடல்களுக்கு மேல் கவிஞர் யுகபாரதி எழுதியிருக்கிறார்…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.