ராணியாருக்கு அஞ்சலி செலுத்த காத்திருக்கும் இலங்கைப் பெண்மணி: அவர் கூறிய உருக்கமான பின்னணி


அஞ்சலி செலுத்த முன் வரிசையில் காத்திருப்பதாக இலங்கையரான தமிழ் பெண்மணி

பெரிய மாமா ஆறாம் ஜார்ஜ் மன்னரால் நைட் பட்டம் பெற்றவர், முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர்

காலமான பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த முன் வரிசையில் காத்திருப்பதாக இலங்கையரான தமிழ் பெண்மணி ஒருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ராணியாருக்கு அஞ்சலி செலுத்த காத்திருக்கும் இலங்கைப் பெண்மணி: அவர் கூறிய உருக்கமான பின்னணி | Sri Lankan Queueing All Night Pay Respects Queen

@PA

பிரித்தானிய ராணியார் உடல் தற்போது எடின்பர்க் புனித கைல்ஸ் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில் எடின்பர்க் விமான நிலையம் கொண்டுச் எல்லப்பட்டு, அங்கிருந்து லண்டன் நகருக்கு எடுத்துவரப்படுகிறது.

தொடர்ந்து, ராணியாரின் உடல் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் நான்கு நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் பகுதியில் ஆயிரக்கணக்கணக்கான மக்கள் ஏற்கனவே ராணியாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரவு பகலாக காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

ராணியாருக்கு அஞ்சலி செலுத்த காத்திருக்கும் இலங்கைப் பெண்மணி: அவர் கூறிய உருக்கமான பின்னணி | Sri Lankan Queueing All Night Pay Respects Queen

@PA

அதில் ஒருவர் இலங்கைத் தமிழரான லண்டனில் வசிக்கும் 56 வயதான வனேசா நந்தகுமாரன். ராணியாருக்கு அஞ்சலி செலுத்தவிருக்கும் பொதுமக்களில் தாம் முதல் வரிசையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகம் வழியாக கடந்து செல்கையில், பொதுமக்கள் அஞ்சலிக்கான வரிசை லம்பேத் பாலத்திற்கு தெற்கே தொடங்கும் என கேள்விப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அந்தப்பகுதிக்கு விரைந்த வனேசா, தற்போது முதல் வரிசையில் காத்திருப்போரில் ஒருவர் என தெரிவித்துள்ளார்.

ராணியாருக்கு அஞ்சலி செலுத்த காத்திருக்கும் இலங்கைப் பெண்மணி: அவர் கூறிய உருக்கமான பின்னணி | Sri Lankan Queueing All Night Pay Respects Queen

@SkyNews

புதன்கிழமை முதல் வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் பகுதியில் ராணியாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
இதுவரை நாட்டுக்கு அவர் அளித்த சேவைகளுக்கு, அவருக்கு நன்றி கூற வேண்டும், அதற்காகவே காத்திருப்பதாக வனேசா உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த காத்திருப்பு உண்மையில் வீண்போகாது என்றார் வனேசா. பிரித்தானியாவுக்காகவும் சர்வதேச நாடுகளுக்காகவும் ராணியார் அளப்பரிய சேவைகளை முன்னெடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார் வனேசா.

அவரது பெரிய மாமா ஆறாம் ஜார்ஜ் மன்னரால் நைட் பட்டம் பெற்றவர் என்றும், இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பு மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டதாகவும் வனேசா தெரிவித்துள்ளார்.

ராணியாருக்கு அஞ்சலி செலுத்த காத்திருக்கும் இலங்கைப் பெண்மணி: அவர் கூறிய உருக்கமான பின்னணி | Sri Lankan Queueing All Night Pay Respects Queen

@reuters

இலங்கை தமது உரிமைகளை திரும்பப்பெற விரும்பியபோது, ராணியாரால் நாட்டுக்கு சுதந்திரத்தை அளித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னர் இளவரசி டயானாவின் இறுதிச்சடங்குகளின் போதும் பல மணி நேரம் இதுபோன்று தாம் காத்திருந்ததை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை வரையில் ராணியாரின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.
750,000 முதல் 1 மில்லியன் மக்கள் வரையில் வரிசையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

திங்கட்கிழமையில் இருந்தே பொலிசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் குழு வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.