11 மற்றும் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் எப்போது.? அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.!

11 மற்றும் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், தோல்வி அடைந்த மாணவர்களுக்கு கடந்த மாதம் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வரும் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலும், தனித் தேர்வு மாணவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் இந்த சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.