அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அந்த அறக்கட்டளை உருவாக்கிய விதிமுறைகளை அங்கீகரிப்பதற்கான கூட்டம் பைஸாபாத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய் கூறும்போது, ‘‘அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கான ஒட்டுமொத்த செலவினம் ரூ.1,800 கோடியாக இருக்கும் என கட்டுமான நிபுணர்களால் மதிப்பீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் கட்டுமானப் பணிகள் வரும் 2023-ம் ஆண்டுக்குள் நிறைவடையும்’’ என்று தெரிவித்தார்.