இந்திய பங்கு சந்தையின் தலையெழுத்து இன்று எப்படியிருக்கும்.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்?

இந்திய பங்கு சந்தைகள் கடந்த அமர்வில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை கடந்து காணப்படுகின்றது.

சென்செக்ஸ் 322 புள்ளிகள் அதிகரித்து, 60,115 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 103 புள்ளிகள் அதிகரித்து, 17,936 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாக புல்லிஷ் கேண்டில் உருவாகியுள்ளது. ஆக இன்று மீண்டும் சற்று ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று சென்செக்ஸ், நிஃப்டி எப்படியிருக்கும்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்.. கவனமா இருங்க!

 முக்கிய லெவல்கள்

முக்கிய லெவல்கள்

பைவேட் சார்ட்டின் படி, நிஃப்டியின் முக்கிய சப்போர்ட் லெவல் 17,890 புள்ளிகளாகவும், அதனை தொடர்ந்து 17,844 புள்ளிகளாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 17,981 புள்ளியாகவும், அதனை தொடர்ந்து 18,027 புள்ளியாகவும் உள்ளது.

 பேங்க் நிஃப்டி

பேங்க் நிஃப்டி

பேங்க் நிஃப்டி கடந்த அமர்வில் 158 புள்ளிகள் அதிகரித்து, 40,574 புள்ளியாகவும் இருந்தது. வரவிருக்கும் நாட்களில் சற்று ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதற்கிடையில் பைவேட் கணக்கீட்டின் படி முக்கிய சப்போர்ட் லெவல் 40,406 புள்ளியாகவும், அதனை தொடர்ந்து 40,239 புள்ளியாகவும் உள்ளது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 40,713 புள்ளிகளாகவும், இதனை தொடர்ந்து 40,853 புள்ளிகளாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

 கால் &  புட் ஆப்சன் டேட்டா
 

கால் & புட் ஆப்சன் டேட்டா

இன்றைய சந்தை அமர்வில் கால் ஆப்சன் டேட்டா மற்றும் புட் ஆப்சன் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. குறிப்பாக அதன் ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது.

 ஹை டெலிவரி பர்சேன்டேஜ்

ஹை டெலிவரி பர்சேன்டேஜ்

ஹை டெலிவரி பர்சேன்டேஜ் கொண்ட பங்குகள், பொதுவாக முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டும் பங்குகளாக உள்ளன. இதில் டாப் பங்குகளில் வோர்ல்புல், மேக்ஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், என்டிபிசி, வோல்டாஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, சோழமண்டலம் ஃபைனான்ஸ், கோல்கேட் பால்மோலிவ், ஹெச் டி எஃப் சி, எஸ்பிஐ லைஃப், லாரஸ் லேப்ஸ் (LAURUSLABS) உள்ளிட்ட சில பங்குகள் இன்று கவனிக்கப்பட வேண்டிய பங்குகளாக உள்ளன. ஹை டெலிவரி பர்சேன்டேஜ் கொண்ட பங்குகள், பொதுவாக முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டும் பங்குகளாக உள்ளன. இதில் டாப் பங்குகளில் வோர்ல்புல், மேக்ஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், என்டிபிசி, வோல்டாஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, சோழமண்டலம் ஃபைனான்ஸ், கோல்கேட் பால்மோலிவ், ஹெச் டி எஃப் சி, எஸ்பிஐ லைஃப், லாரஸ் லேப்ஸ் (LAURUSLABS) உள்ளிட்ட சில பங்குகள் இன்று கவனிக்கப்பட வேண்டிய பங்குகளாக உள்ளன.

நீண்டகால நோக்கில் ஏற்றம் காண வாய்ப்பு

நீண்டகால நோக்கில் ஏற்றம் காண வாய்ப்பு

ஒரு பங்கின் விலை அதிகரிக்கும்போது, அதன் ஓபன் இன்ட்ரஸ்ட் அதிகரித்தால், அது நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் எனலாம்.
அந்த வகையில் கவனிக்க வேண்டிய டாப் 10 பங்குகளில் அதுல் (ATUL), ஜேகே சிமெண்ட், ஆர்த்தி இன்டஸ்ட்ரீஸ் (AARTIND), ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் (HAL), வோல்டாஸ், நவீன் ப்ளோர், அப்பல்லோ டயர், ஏசிசி, பிஎன்பி, டிஎல்எஃப் உள்ளிட்ட பல பங்குகள் அடங்கும்.

நீண்டகால சரிவு

நீண்டகால சரிவு

ஓபன் இன்ட்ரஸ்ட் குறையும்போது, பங்கு விலையும் குறைந்தால் இந்த பங்குகள் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய டாப் 10 பங்குகள்

ஜே எஸ் டபள்யூ ஸ்டீல்
சின்ஜீன்
எண்டிபிசி
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
கோல்கேட் பால்மோலிவ்
ஐடிசி
இண்டிகோ
நெஸ்டில் இந்தியா லிமிடெட் (NESTLENIND)
கிரானுல்ஸ் (GRANULES)
மாருதி

 

ஷார்ட் பில்டப்

ஷார்ட் பில்டப்

ஒரு பங்கின் ஓபன் இன்ட்ரஸ்ட்ரேட் அதிகரித்து, பங்கு விலை குறைந்தால், இந்த பங்கு விலையானது குறுகிய காலத்தில் ஏற்றம் காணலாம்.

இந்தியா புல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் (IBULHSGFIN)
கோல் இந்தியா
மேக்ஸ் ஃபைன்னான்ஷியல் சர்வீசஸ் (MFSL)
ஆஸ்ட்ரால் (ASTRAL)
பஜாஜ் ஃபின்செர்வ்
அப்போட் இந்தியா
டிக்சான்
ஜிஎஸ்பிஎல்
டோரண்ட் பவர்
லாருஸ் லேப்ஸ்

 

ஷார்ட் கவரிங்

ஷார்ட் கவரிங்

இதே ஒரு பங்கின் ஓபன் இன்ட்ரஸ்ட் ரேட் குறையும்போது, பங்கின் விலை அதிகரித்தால் அது ஷார்ட் கவரிங் ஆகவும் இருக்கலாம்.

பிவிஆர்
எல்டிடிஎஸ்
அம்புஜா சிமெண்ட்
குஜராத் நர்மதா வாலி ஃபெர்டிலைசர்ஸ் & கெமிகல்ஸ் (GNFC)
டிவிஸ் லேப்ஸ்
கோஃபோர்ஜ் (COFORGE) லிமிடெட்
லார்சன் & டூப்ரோ இன்ஃபோடெக் (LTI)
சிட்டி யூனியன் வங்கி (CUB)
ஆக்ஸிஸ் வங்கி
ஆரக்கிள் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் சாப்ட்வேர் லிமிடெட் (OFSS)உள்ளிட்ட சில பங்குகள் அடங்கும்.

 

மொத்த ஒப்பந்தங்கள்

மொத்த ஒப்பந்தங்கள்

கிருஷ்ணா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ், முத்தூட் கேப்பிட்டல் சர்வீசஸ், போதல் கெமிக்கல்ஸ், போதி ட்ரீ மல்டிமீடியா லிமிடெட், சிஎமெம் இன்ஃப்ரா உள்ளிட்ட பல பங்குகள் இன்று கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகளாக உள்ளன. மேற்கண்ட பங்குகள் திறந்த சந்தை உள்ளிட்ட சில பரிவர்த்தனைகள் மூலம் பங்குகளை வாங்கவும், விற்பனை செய்யவும் உள்ளன.

 முதலீட்டாளர்கள் கூட்டம்

முதலீட்டாளர்கள் கூட்டம்

ஐடிடி, டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், டெல்லிவரி, டெக் மகேந்திரா, சன் பார்மா, அஜந்தா பார்மா, மேக்ரோ டெக் டெவலப்பர்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ், எஸ்பிஐ, க்ராம்ப்டன் கிரேவ்ஸ், டாடா பேட்டர்ன்ஸ், ஷாப்பர்ஸ் ஷாப், இந்தியா எனர்ஜி எக்ஸ்சேஞ்ச், கிரேவ்ஸ் காட்டன், ஈச்சர் மோட்டார்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அதன் முதலீட்டாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளன.

பங்கு செய்திகள்

பங்கு செய்திகள்

டாடா கன்சல்ஸ்டன்ஸி சர்வீசஸ், குஜராத் அப்பல்லோ இன்டஸ்ட்ரீஸ், உஜ்ஜீவன் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், ஹெச் டி எஃப் சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், கிருஷ்ணா இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ், உள்ளிட்ட பங்குகள் இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் லிஸ்டில் உள்ளன.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

செப்டம்பர் 12 நிலவரப்படி, என் எஸ் இ தரவுகளின் படி அன்னிய முதலீடானது 2049.65 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 890.51 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர்.

எஃப் & ஓ தடை

எஃப் & ஓ தடை

பொதுவாக ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 95% வரம்பினை தாண்டிய பங்குகள் எஃப் & ஓவில் தடை செய்யப்படும். இந்த பங்குகள் மீண்டும் 80% கீழாக ஓபன் இன்ட்ரஸ்ட் குறையும் போது வர்த்தகத்திற்கு திரும்பும்.இன்றைய சந்தை அமர்வில் அப்படி இருக்கும் பங்குகள் கவனிக்கப்பட வேண்டியவையாக உள்ளன.
இதில் இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ், டெல்டா கார்ப் உள்ளிட்ட பங்குகள் கவனிக்கப்பட வேண்டியவையாக உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Trade setup for today: 15 factors to watch including Sensex, Nifty

With the market ending on a slight uptrend in the last session, let’s take a look at 15 factors to watch today.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.