இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னால்ஜி, மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதியாளராக இருந்து வருகின்றது.
இந்த சாப்ட்வேர் நிறுவனம் அதன் வாடிக்கையாளரான மைக்ரோசாப்ட்டின் திட்டத்தின் பணிபுரியும் ஊழியர்களில், 350 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக மணிக் கன்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியியில், ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் சர்வதேச அளவில் தங்களது செலவு குறைப்பு நடவடிக்கையினை தீவிரமாக எடுத்து வருகின்றன.
ஐடி ஊழியர்களுக்கு எதிராக ஒன்று சேரும் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல்..!
பணி நீக்கமா?
தற்போது மிக கடினமான சூழல் இருந்து வரும் நிலையில், ஹெச்சிஎல் டெக்னால்ஜி நிறுவனத்தின் இந்த முடிவானது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இது ஐடி துறையில் நிலவி வரும் மெதுவான வளர்ச்சியினையே சுட்டி காட்டுகின்றது. ஹெச் சி எல் நிறுவனத்தின் இந்த பணி நீக்கமானது குவாத்தமாலா, இந்தியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
செப்டம்பர் கடைசி வேலை நாளா?
இவர்களுக்கு வரவிருக்கும் செப்டம்பர் 30ம் தேதி கடைசி வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு பணி நீக்க ஊதியமும் கொடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
என்ன காரணம்?
மைக்ரோசாப்ட் பணியின் தரத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து அதன் செய்தி தளமான, எம் எஸ் என் தளத்தில் கண்கானித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அசெஞ்சருக்கு வாய்ப்பா?
எனினும் மற்றொரு தரப்பு ஹெச் சி எல் உடனான ஒப்பந்தம் முடிவடிடைந்துள்ளதாகவும், இது வாய்ப்பு இந்த முறை வேறு ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஒப்பந்தத்தினை அசெஞ்சர் பெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதே பாணியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பர்தா மீடியவும், இதேபோன்று சுமார் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நிறுவனங்களின் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இந்திய ஐடி நிறுவனங்கள் அதன் மார்ஜினில் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச டெக் நிறுவனங்களான மைக்ரோசாப்ட், ஆப்பிள், மெட்டா, அமேசான், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே, மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கூகுள் நிறுவனம் சமீபத்தில் அதன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய நிறுவனங்கள் மறுசீரமைப்பு
இதே இந்திய நிறுவனங்களான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு சீரமைப்பு திட்டங்களை எடுத்து வருகின்றன. குறிப்பாக அதன் ஊதியத்தில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளன.
மொத்தத்தில் ஐடி துறையில் நிலவி வரும் சவாலான நிலையினை, நிறுவனங்களின் இதுபோன்ற நடவடிக்கையினை பிரதிபலிக்கிறது.
HCL tech lay off 350 employees working on Microsoft project
HCL Technologies has reportedly laid off 350 employees working on its client Microsoft’s project.