டெல்லி: அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை எடுத்து ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல் முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவு அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் தெளிவு படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து உயர்நீதிமன்றம் உத்தரவின் படி அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்பாடைக்கப்பட்டது. இதுக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றம் நீதிபதி டி.ஒய். சந்திர சூட் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தை சீலிடுவது சாதாரண விவகாரம் அல்ல என்று கூறிய நீதிபதிகள் ஏன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வியெழுப்பினார். இதற்க்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர் சட்ட ஒழுங்கை காக்கவே அதிமுக அலுவலகம் காவல் துறை காட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார். ஜனநாயகம் வழியில் இல்லாமல் அரசியல் கட்சி செயல்படுவதை ஏற்கமுடியுமா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினார். ஓ.பி.எஸ். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் அவரால் எப்படி உரிமை கூறமுடியும் என ஓ.பி.எஸ். தரப்பிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்.
அலுவலகம் மூடப்பட்டது கிரிமினல் நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்று அவர்கள் கூறினார். அலுவலக சாவியை கோருவது சிவில் நடவடிக்கை என்றல் மீண்டும் சிவில் வழக்கு தொடர்ந்து அலுவலகத்தை மீட்க சட்ட வழிகளை நாடலாமே என்று நீதிபதிகள் ஓ.பி.எஸ். தரப்பிடம் கேள்வியெழுப்பினார். அப்பொழுது அதிமுக ஒருங்கிணைப்பாளராக இப்போதும் ஓ. பன்னீர்செல்வம் இருப்பதாகவும் இதனாலையே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உரிமை கோருவதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்து தரப்பு வாதங்களையும் கெடுதறிந்த பிறகு நீதிபதிகள் இந்த விவகாரத்தில் அதிமுக அலுவலகத்தை முடிய வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கையை ரத்து செய்ய மற்றும் எடப்பாடி பழனிசாமி இடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தனர்.
அதையே நேரத்தில் ஓ. பன்னீர்செலவம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்வதாக கூறி வழக்கை முடித்து வைத்தனர். வரும் நாட்களில் ஓ. பன்னீர்செலவம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக சிவில் வழக்கு தொடரப்பட்டால் அந்த வழக்கில் உச்சநீதிமாற்றத்தில் இன்றைய உத்தரவு எந்த வகையிலும் பிரதிபலிக்காது எனவும் மற்ற வழக்குகளிலும் இந்த தீர்ப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் நீதிபதிகள் தெளிவு படுத்தினர்.