தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் மின்சார மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் இருந்தவர்களில் 7 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
செகந்திராபாத்தில் ரூபி எலக்ட்ரிக்கல் என்ற மின்சார மோட்டார் சைக்கிள் ஷோரூமும், அந்த கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் லாட்ஜும் இயங்கி வந்தது.
நள்ளிரவு மின்சார மோட்டார் சைக்கிள் ஷோரூமில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் எழுந்த கரும்புகையால், லாட்ஜில் தங்கியிருந்தவர்களில் ஒரு பெண் உள்பட 7 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
உயிருக்கு போராடிய 4 பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.