Whatsapp Update : வாட்ஸப்பின் புது அப்டேட் மூலம் உங்கள் காதலியுடன் சண்டையை தவிர்க்கலாம்

பேபி நா உனக்கு மொத மொத அனுப்புன மெசேஜ் என்னனு சொல்லு பார்க்கலாம் அப்படினு உங்க காதலியோ அல்லது காதலனோ உங்களிடம் கேட்க பேபி என்னைக்குனு தெரியும் ஆனா என்னனு தெரியாதுன்னு சொன்னிங்கன்னா அடுத்த ஒரு வாரம் அந்த வாட்ஸப்பே ப்ளாக்.

அல்லது ஏதாவது அலுவல்ரீதியாக நினைவு கூறவேண்டிய தகவல்களை மறந்துவிட்டு அலுவலகத்தில் மேனேஜரிடம் திட்டு வாங்கி கொண்டிருப்போம். ஆனால், இனி அதற்கெல்லாம் அவசியமில்லை. வாட்ஸப்பில் புதிய அப்டேட் ஒன்றை முழுவீச்சோடு அமுலாக்க திட்டமிட்டுள்ளது மெட்டா வாட்ஸப் நிறுவனம்.

நீங்கள் மறந்து விட்ட ஒரு தகவலை அந்த தேதியை போட்டு தேடினால் சட்டென்று கண்டுபுடித்து தரும் வாட்ஸப். இந்த வசதி கடந்து இரண்டு வருடங்களுக்கு மேல் இருப்பதாகவும்,

தற்போது தான் மெட்டா நிறுவனம் முதற்கட்டமாக ஐபோன்களில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த போவதாகவும், பின் ஆண்ட்ராய்டு மொபைல்களில் இதே அம்சத்தை வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில்தான் ஆப்பிள் ஐபோன்களில் ஐஓஎஸ்10 மற்றும் ஐஓஎஸ்11 உள்ள மாடல்களில் வாட்ஸப் இயங்காது என அறிவித்திருந்தது வாட்ஸப் நிறுவனம்.

ஆனால், இந்த புதிய அப்டேட்டை முதன்மையாக ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு தருவதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறது வாட்ஸப் நிறுவனம். அதற்கு பின்பாக ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் இந்த வசதி அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த அப்டேட் எப்படி வேலை செய்யும்?

Step 1: உங்கள் வாட்ஸப்பில் உள்ள தேடுதளத்தில் சென்று எந்த தேதியில் உள்ள மெசேஜ் உங்களுக்கு வேண்டுமோ அதை டைப் செய்து தேட வேண்டும்.

Step 2: பின் அந்த தேதியில் நீங்கள் பேசிய தனிப்பட்ட மற்றும் குரூப் மெசேஜ்கள் தோன்றும்.

Step 3: அதில் தேடி உங்களுக்கு எந்த மெசேஜ் வேண்டுமோ அதை நீங்கள் படித்து கொள்ளலாம்.

தற்போது இந்த அம்சம் சோதனை முறையில் பயனர்களின் பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை தங்களோடு பகிர்ந்து கொள்ளுமாறு வாட்ஸப் தனது பயனர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.