ஆசிய வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகள் இரண்டும் இன்று (13) அதிகாலை நாடு திரும்பின.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து இலங்கை வலைப்பந்தாட்ட அணி வீராங்கனைகள் இன்று அதிகாலை 12.50 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிகாலை 4.55 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்த இரு அணி வீரர், வீராங்கனைகளை விமான நிலையத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் ரோஹண திசாநாயக்க வரவேற்றார்.
இந்த வரவேற்பு நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
வரவேற்பு நிகழ்ச்சியின் பின்னர், விளையாட்டு வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இலங்கை கிரிக்கெட் தலைமை அலுவலகம் மற்றும் விளையாட்டு அமைச்சக வளாகத்தில் உள்ள வலைப்பந்து சம்மேளன தலைமையகத்திற்கு சிறப்பு வாகன அணிவகுப்பில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதன்போது ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் வீதியோரம் வரிசையாக அணிவகுத்து, தேசியக் கொடியை அசைத்து உற்சாகப்படுத்தி இரு அணிகளுக்கும் தங்கள் ஆதரவையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.