இந்தியாவின் முன்னணி வணிக குழுமமங்களில் ஒன்று பாபா ராம்தேவின் பதஞ்சலி குழுமம். தொடர்ந்து தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகிறது. தற்போது தனது வணிகத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழைய திட்டமிட்டுள்ளது.
பாபா ராம்தேவின் 4 நிறுவனங்கள் தங்களது பொது பங்கு வெளியீட்டினை செய்ய திட்டமிட்டுள்ளன. ஆக விரைவில் பதஞ்சலி குழும நிறுவனங்கள் பங்கு சந்தைக்குள் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளிப்கார்ட் சச்சின் பன்சால்-க்கு அடித்த ஜாக்பாட்.. செபி கொடுத்த உத்தரவு..?
என்னென்ன நிறுவனங்கள்?
இது குறித்து ஜீ பிசினஸ்-க்கு அளித்த பேட்டியில் பதஞ்சலி ஆயுர்வேதம், பதஞ்சலி வெல்னஸ், பதஞ்சலி மெடிசன் மற்றும் பதஞ்சலி லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் என ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
பதஞ்சலி + ருச்சி சோயா
கடந்த 2019ம் ஆண்டில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் ருச்சி சோயா நிறுவனத்தின் 4350 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. இந்த நிறுவனம் ஏற்கனவே பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது இந்த நிறுவனத்தின் பெயர் பதஞ்சலி ஃபுட்ஸ் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
52 வார உச்ச விலை
கடந்த வெள்ளிக்கிழமையன்று பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 52 வார உச்சத்தினை எட்டியது. இதன் 52 உச்ச விலை 1380.35 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் 52 வார உச்ச விலையானது 1400 ரூபாயாக தொட்டது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 700.05 ரூபாயாக இருந்தது.
இலக்கு விலை
இதற்கிடையில் தரகு நிறுவனங்கள் இந்த பங்கு விலையானது 1725 ரூபாயினை தொடலாம் என கணித்துள்ளனர். பதஞ்சலி ஃபுட்ஸ் இந்தியாவில் முன்னணி 5 நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இது இந்தியாவின் முன்னணி சமையல் எண்ணெய் நிறுவனங்களில் ஒருவராகவும் உள்ளது.
தொடர்ந்து விரிவாக்கம்
கடந்த ஆகஸ்ட் 31ல் அருணாசல பிரதேசத்தில் பால்ம் மில் ஒன்றை நிறுவியது குறிப்பிடத்தக்கது. தொடந்து தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வரும் பதஞ்சலி, தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான நிதி முதலீடுகளை திரட்ட பங்கு சந்தையிலும் களமிறங்க திட்டமிட்டுள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
Baba ramdev plans to IPO launch of 4 patanjali brands
Baba Ramdev said companies including Patanjali Ayurved, Patanjali Wellness, Patanjali Medicine and Patanjali Lifestyle will be listed on the stock market in the next 5 years.