உலக நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கம் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்து வருகிறது, இந்தப் பாதிப்பைச் சமாளிக்க இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை -0.5 சதவீதத்தில் இருந்து 0.75 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இது ஐரோப்பியச் சந்தையில் பெரிய அளவிலான பணப்புழக்க பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் நிலைமை சற்று மோசமாக மாறியுள்ளது.
குஜராத்-க்கு ஜாக்பாட்.. 1000 ஏக்கர் நிலம், 20 பில்லியன் டாலர் முதலீடு.. பிரம்மாண்ட தொழிற்சாலை!
ரீடைல் பணவீக்கம்
இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் ரீடைல் பணவீக்கம் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, மத்திய அரசு வெளியிட்ட தரவுகள் படி நாட்டின் ரீடைல் பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 7 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இது ஜூலை மாதம் 6.71 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய புள்ளியல் அலுவலகம்
மேலும் தேசிய புள்ளியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகள் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் நாட்டின் பணவீக்கம் ஊரகப் பகுதியில் 7.15 சதவீதமாகவும், நகரங்களில் 6.72 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் மொத்த பணவீக்கம் 7 சதவீதமாக உள்ளது. இது ஜூலை மாதத்தில் 6.71 சதவீதமாகவும், கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் 5.30 சதவீதமாக உள்ளது.
ஆகஸ்ட் பணவீக்கம்
ஜூலை மாதம் பணவீக்கம் குறைந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கையில் சல தளர்வுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்த நிலையில் செப்டம்பர் 28-30 ஆம் தேதி நடக்க இருக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் மீண்டும் ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம்
ஆர்பிஐ ஏற்கனவே வட்டி விகிதத்தைப் பெரிய அளவில் அதிகரித்துள்ள வேளையில் புதிய வட்டி விகித உயர்வு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும். ரீடைல் பணவீக்கம் ஆர்பிஐ இலக்கான 6 சதவீதத்தை விடவும் அதிகமாக இருக்கும் நிலையிலும், இதனால் ஜூலை மாதத்தைக் காட்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
நாணய கொள்கை கட்டுப்பாடுகள்
இதன் மூலம் ஆர்பிஐ-யின் நாணய கொள்கை கட்டுப்பாடுகள் போதுமானதாக இல்லை என்பது உணர்த்துகிறது. இதனால் செப்டம்பர் மாத இறுதியில் நடக்க இருக்கும் ஆர்பிஐ தனது நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்பிஐ
ஆர்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்தினால் கட்டாயம் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும், ஏற்கனவே கொரோனா-வுக்கு முந்த வட்டி விகிதத்தை வங்கிகள் எட்டிய நிலையில் புதிய வட்டி விகிதம் பெரிய அளவிலான பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தும்.
மக்களே உஷார்
மக்களின் வருமானம் பெரிய அளவில் உயராத நிலையில் இத்தொடர் வட்டி விகித உயர்வும், விலைவாசி உயர்வும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் செப்டம்பர் வட்டி விகித உயர்வுக்கு இப்போதே தயாராகுங்கள்.
RBI may hike repo rate again in MPC meet on september 28-30 as Retail inflation at 7 percent
RBI may hike repo rate again in MPC meet on September 28-30 as august 2022 Retail inflation at 7 percent, rural inflation at 7.15 percent.