Vivo Y22 Launch: வெளியானது விவோ Y22, அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்

விவோ வெளியிட்டுள்ள டிசைன் மற்றும் செயல்பாட்டில் அப்க்ரேட் செய்யப்பட்டுள்ள Y சீரிஸ் மாடலான Y22வின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம்.

வேகமான ஃபிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் கேமிங் மோட் வசதி போன்றவற்றை கொடுத்துள்ளது விவோ. சேமிப்பு வசதியும் கூட 1டிபி வரை விரிவுபடுத்தி கொள்வதற்கான வசதிகளை கொண்டுள்ளது.

18 நிமிடங்களுக்கு சார்ஜ் போட்டால் 200 நிமிடங்களுக்கு தொடர்ந்து வீடியோ பார்க்கலாம் என்றும், இரண்டு சுற்று கேம் விளையாடலாம் என்றும் கூறியுள்ளனர். அல்ட்ரா கேம் ஆப்ஷன்கள் கொடுத்திருக்கிறோம் என்று விவோ கூறியுள்ளது. ஆண்ட்ராய்டு 12 சார்ந்த Funtouch OS இல் இயங்குகிறது.

ப்ராசஸர்:

மீடியாடெக் ஹீலியோ G85 (Mediatek Helio G85) ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ்

4GB ரேம் + 64GB ரோம் மற்றும் 6GB + 128GB ரோம் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
டிஸ்பிளே

6.55இன்ச் LCD டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது.60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 530 நிட்ஸ் பிரைட்னஸ்
பேட்டரி

5000mAh பேட்டரி திறன் மற்றும் 18W சார்ஜிங்

கேமரா

50MP மெயின் + 2MP மேக்ரோ பின்பக்க கேமரா வசதி.8MP முன்பக்க கேமரா வசதி வழங்கப்பட்டுள்ளது.
விலை

14,499 ரூபாய் மற்றும் 16,499 ரூபாய் என்ற விலையில் கிடைக்கிறது.

வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப்

IP5X டஸ்ட் ப்ரூஃப் மற்றும் IPX4 வாட்டர் ப்ரூஃப்

நிறங்கள்

மெட்டாவர்ஸ் க்ரீன், ஸ்டார்லைட் ப்ளூ ஆகிய இரண்டு நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

Vivo-Y22 விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்MediaTek MT6582சேமிப்பகம்4 GBகேமரா8 MPபேட்டரி1900 mAhடிஸ்பிளே4.5″ (11.43 cm)ரேம்1 GBமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.