
கல்யாணியின் புதிய படம் துவக்கம்
ரூட் அண்ட் பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் ஜெகதீசன் பழனிசாமி மற்றும் சுதன் சுந்தரம் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகும் படம் 'சேஷம் மைக்-இல் பாத்திமா' தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகும் இந்த படத்தை மனு சி.குமார் இயக்குகிறார், இசையமைப்பாளராக ஹேஷாம் அப்துல் வஹாப், ஒளிப்பதிவாளராக சந்தான கிருஷ்ணன் பணியாற்றுகிறார்கள். படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா நேற்று நடந்தது நாளை முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது நாயகியை மையப்படுத்தும் கதையம் கொண்ட படம் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு கூறியிருக்கிறது.
பல நடிகர், நடிகைகளுக்கு மேலாளராக உள்ள ஜெகதீசன் தான் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கி உள்ளார். தனது நிறுவனத்திற்கு ‛ரூட் அண்ட் பேஷன் ஸ்டுடியோஸ்' என பெயரிட்டுள்ளார்.