ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

மனித உரிமை மீறல் தொடர்பாக தொடர்ந்தும் வழமை போன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி தெளிவுபடுத்தினார்.

நேற்று (12) ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதன் மூலம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கும் அமைச்சர் அலி சப்ரி எடுத்துரைத்தார் என வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் மேலும் தெரிவிக்கையில் அதாவது ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தான் அமைச்சர் அலி சப்ரி தெளிவுபடுத்தினார் என்றார்.

எனினும் கடந்த கால செயற்பாடுகளில் குறிப்பாக நமது நாட்டில் மனித உரிமை தொடர்பாக நாட்டிலுள்ள பல்;வேறு கோணங்களில் பார்ப்பவர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் செயற்பாடுகளால் தான், சர்வதேசத்தில் இலங்கை பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் நடவடிக்கையின் போது பல அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டியிருந்தது. ஆகவே தற்போது அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.